2002-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாள நம்மள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பாவனா.
Advertisment
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் பாவனா.
Advertisment
Advertisements
தொடர்ந்து 2006-ம் ஆண்டு தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம்பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு பரத்துடன் வெயில், கூடல் நகர், ஆர்யா அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதில் கடந்த 2010-ம் ஆண்டு அஜித்துடன் நடித்த அசல் படத்திற்கு பிறகு தமிழில் படங்களில் நடிக்காத பாவனா கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
2019-ம் ஆண்டு கன்னடத்தில் ஜானு என்ற படத்தில் நடித்திருந்த பாவனா அதன்பிறகு 2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கன்னட படத்தில் நடித்தார்.
தற்போது பின்க் நோட், கேஸ் ஆஃப் கோடானா உள்ளிட்ட கன்னட படத்தில் நடித்து வரும் பாவனா மலையாளத்தில் ஹன்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பாவனா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது புன்னகையுடன் பாவனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்’ நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“