1000 சிசி ரகம், 21 லட்சம் விலை; புதிய பி.எம்.டபிள்யூ பைக் வைத்திருக்கும் தமிழ் நடிகை: கார் இவருக்கு பிடிக்காதாம்!

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் மிக இளம் வயதிலேயே மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கி, குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் மிக இளம் வயதிலேயே மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கி, குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

author-image
WebDesk
New Update
Manju Warrier

தமிழகத்தில் பிறந்திருந்தாலும், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஒருவர், நடிப்பில் மட்டும் இல்லாமல், வாகனங்கள் ஓட்டுவதிலும், ஃபோட்டோகிராஃபியிலும் ஆர்வம் காட்டி வருகிறார், அந்த நடிகை யார் தெரியுமா?

Advertisment

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் மிக இளம் வயதிலேயே மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கி, குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர், பாலிவுட் மற்றும் தென்னிந்தியப் பட உலகின் பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார். ஒரு காலத்தில், மலையாளத் திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்தார்.

அந்த நடிகை வேறு யாருமல்ல, மஞ்சு வாரியர் தான். இவர் மலையாளத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். பலவிதமான கேரக்டர்களில் நடித்து வரும் இவர், தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போதைய நிலவரப்படி மஞ்சு வாரியரின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 142 கோடி என்று கூறப்படுகிறது.  திரைப்படங்கள் மூலம்தான் இவருக்கு முக்கிய வருமானம் என்றாலும், விளம்பரங்கள் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்களும் இவரது வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

Manju 4

மஞ்சு வாரியர் ஒரு படத்திற்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தமிழில், னுஷுடன் 'அசுரன்' படத்தின் மூலம் அறிமுகமான மஞ்சுவாரியார் அடுத்து அஜித்துடன் 'துணிவு' படத்தில் நடித்திருந்தார். தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இவர் பிறந்த நாளை முன்னிட்டு அந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மஞ்சுவாரியாருக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களில், பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் பல முன்னணி பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்றுகிறார். தகவல்களின்படி, ஒவ்வொரு விளம்பரத்திற்கும் லட்ச கணக்கில் பெறுவதாகக் கூறப்படுகிறது. இது இவரது வருமானத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

Advertisment
Advertisements

அதேபோல் மற்ற நடிகைகளை போல் இல்லாமல், மஞ்சு வாரியருக்கு பைக்குகள் மீது அதிக ஆர்வம் உண்டு. மேலும், பலவிதமான மாடல் பைக்குகளைச் சேகரிக்கவும் மிகவும் விரும்புகிறார். சமீபத்தில், தனது சேகரிப்புக்காக சுமார் ரூ. 21 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ ஆர் 1250 ஜி.எஸ் (BMW R 1250 GS) பைக்கைப் புதிதாக வாங்கியுள்ளார். இந்தச் செய்தியை மிகவும் உற்சாகத்துடன் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். ரசிகர்கள் மற்றும் பைக் பிரியர்கள் மத்தியில் இது பெரும் அளவில் பரவியது.

மஞ்சு வாரியர் இன்றும் திரைப்படங்களில் பலவிதமான கேரக்டர்களுக்காக பெரிதும் தேடப்படுகிறார். இவருக்குப் பல படங்கள் வரிசையாகக் காத்துக்கொண்டிருக்கின்றன. இவர் ஒரு நடிகை மட்டுமல்ல, இந்திய சினிமாவில் கடின உழைப்பு மற்றும் படைப்பாற்றலின் அடையாளமாகவும் இருக்கிறார். ஏனெனில், இவர் எப்போதும் வெற்றியும் அர்ப்பணிப்பும் கொண்டவர்.

tamil cinema actress Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: