Advertisment

விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர்... இப்போ வாய்ப்பு இல்லையே! இந்த குழந்தை யார்னு தெரியுதா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Anushaka Sheetty
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாதவனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகி, பின்னாளில் விஜய் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமூகவலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புகைப்படங்கள் வீடியோக்கள் ரீல்ஸ்கள் என வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

அதேபோல் ஒரு சில நடிகைகள் தங்கள் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் மாதவனுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து விஜய், அஜித், சூர்யா, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.

பொள்ளாச்சியில் அனுஷ்காவின் கேராவேன் பறிமுதல்!

அந்த நடிகை வேறு யாருமில்லை. அனுஷ்கா தான். சுந்தர் சி. இயக்கத்தில் மாதவன் இரட்டை வேடங்களில் நடித்த ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக அனுஷ்கா, அடுத்து வேட்டைக்காரன் படத்தில் விஜயுடனும், சிங்கம், படங்களில் சூர்யாவுடனும், என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடனும் இணைந்து நடித்திருந்தார். அதேபோல் லிங்கா படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்த அணுஷ்காவுக்கு தெலுங்கில் அருந்ததி, பாகுபலி படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தது.

தமிழில் கடைசியாக சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடித்த அனுஷ்கா சமீபத்தில் தெலுங்கில் வெளியான மிஸ் அன்ட் மிஸஸ் பெனிஷெட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பலரும் இவர் அணுஷ்காதான என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anushka Shetty
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment