விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தின் அவரின் அம்மா பெண் தொழிலதிபராக நடித்த நடிகை ரியல் லைஃபில் தொழிலதிபராக இருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபா ராமானுஜம். 1997-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் 18 ஆண்டுகளுக்கு பின் 2015-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பசங்க 2 ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த தீபா ராமானுஜம் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இயக்குனர் சசி இயக்கிய இந்த படத்தில் பெண் தொழிலதிபராக நடித்திருந்த இவர், உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பார். இவருக்கான வேண்டிக்கொண்டு விஜய் ஆண்டனி பிச்சை எடுப்பார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் சாதனை படைத்த நிலையில், தெலுங்கிலும் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியாகி விஜய் ஆண்டனியின் தெலுங்கு மார்க்கெட்டை உயர்த்தியது. இந்த படத்தை தொடர்ந்து சசி இயக்கிய சிகப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த்தின் அம்மாவாக நடித்திருந்தார்.

மகேஷ்பாபுடன் ஸ்பைடர், சிம்புவுடன் இது நம்ம ஆளு, அபியும் அனுவும் உள்ளிட்ட படங்களில் நடித்த தீபா ராமானுஜம், கடைசியாக தமிழில் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படத்தில் அவரின் அம்மாவாக நடித்திருந்தார் நடித்த அனைத்து படங்களிலும் அம்மாவாவே நடித்திருந்த தீபா ராமானுஜம் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
அமெரிக்காவில் தனது கணவருடன் இணைந்து பெண்களுக்கு ஜீன்ஸ் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி நிஜத்திலும் தொழிலதிபராக இருக்கிறார். இவரின் ஸ்டைலிஷான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், பிச்சைக்காரன் படத்தில் நடித்த அம்மா நடிகையாக இவர் நம்பவே முடியவில்லை என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/