Tamil Cinema Actress Devayani Daughter Photo Viral On Social Media அடுத்த ஹீரோயின் ரெடி: சேலை கட்டி வந்த தேவயானி மகள் | Indian Express Tamil

அடுத்த ஹீரோயின் ரெடி: சேலை கட்டி வந்த தேவயானி மகள்

நடிகை தேவையானி கடந்த 2001-ம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.

அடுத்த ஹீரோயின் ரெடி: சேலை கட்டி வந்த தேவயானி மகள்

அஜித் விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை தேவயானியின் மகள், சேலை கட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1993-ம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான ஷாட் பண்ஜோமி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானர் தேவயானி அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் நடித்த அவர், 1995-ம் ஆண்டு தமிழில் வெளியான தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1996-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான காதல்கோட்டை திரைப்படம் தேவயானிக்கு தமிழில் ரசிகர்களை பெற்று தந்தது.

அதன்பிறகு விஜய் நினைத்தேன் வந்தாய், ப்ரண்ஸ், சரத்குமாருடன் சூரியவம்சம், மூவேந்தர், மம்முட்டியுடன் மறுமலர்ச்சி, நீ வருவாய் என, வல்லவரசு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். தமிழில கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு களவாணி மாப்பிள்ளை என்ற படத்தில் தேவயானி நடித்திருந்தார். படங்கள் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்துள்ள தேவயானிக்கு கோலங்கள் சீரியல பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்நிலையில், நடிகை தேவயானி கடந்த 2001-ம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், இனியா என்ற மூத்த மகளுக்கு தற்போது 17 வயதாகிறது. இந்நிலையில், சமீபத்தில் சேலைகட்டி இனியா எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.  

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தேவயானிக்கு இவ்வளர் பெரிய மகள் இருக்கிறாரா என்று கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் தமிழ் சினிமாவிற்கு மேலும் ஒரு ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்று கூறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress devayani daughter photo viral on social media