சீரியலில் நடிக்கும்போதே கர்ப்பம்; அதை மறைக்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க: தேவயானி கோலங்கள் மெமரீஸ்

1995-ம் ஆண்டு வெளியான தொட்டஞ்சிணுங்கி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கடைசியாக 2003-ம் ஆண்டு வெளியான காதலுடன் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

1995-ம் ஆண்டு வெளியான தொட்டஞ்சிணுங்கி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கடைசியாக 2003-ம் ஆண்டு வெளியான காதலுடன் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

author-image
WebDesk
New Update
devayani deepa venkat

கோலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை தேவயானி, சீரியலில் நடிக்கும்போதே கர்ப்பமான நிலையில், அந்த கர்ப்பததை மறைக்க ரொம்பவே கஷ்டப்பட்டார் என்று அந்த சீரியலில் அவருடன் இணைந்து நடித்த தீபா வெங்கட் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை தேவயானி. மும்பையில் பிறந்த இவர், பெங்காலி, படத்தில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்திருந்தார். 1995-ம் ஆண்டு வெளியான தொட்டஞ்சிணுங்கி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கடைசியாக 2003-ம் ஆண்டு வெளியான காதலுடன் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

அதன்பிறகு, படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க தொடங்கிய தேவயானி, 1999-ம் ஆண்டு தான் இயக்கிய நீ வருவாய் என படம் உட்பட தான் இயக்கிய 4 படங்களிலும் தன்னை நாயகியாக நடிக்க வைத்த இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து கடந்த 2001-ம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், தேவயானி தற்போது சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள தேவயானி, சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் தேவயானி சமீபத்தில் கூட, நடிகர் சரத்குமார், சித்தார்த்துடன் இணைந்து 3 பி.எச்.கே என்ற படத்தில் நடித்திருந்தார். இநத படம் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றிருந்தது. தற்போது ஜீன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சின்னத்திரையில், தேவயானி ரசிகர்களை கவர்ந்த சீரியலான கோலங்கள் சீரியல் குறித்து நடிகை தீபா வெங்கட் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

கோலங்கள் சீரியலில நடிக்கும்போது தேவயானி கர்ப்பமாகிவிட்டார். கர்ப்பத்துடன் தான் சீரியலில் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் பிரசவ நேரம் நெருங்கும்போது, அவர் தொடர்பான காட்சிகளை அதிகமாக எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது அவர் தனது கர்ப்பத்தை மறைக்க, ரொம்பவே கஷ்டப்பட்டார். சீரியல் காட்சிக்காக அவர் அழும்போது எல்லாம் அவரை பார்த்தால் பாவாக இருக்கும் என்று தீபா வெங்கட் கூறியுள்ளார். சீரியலில், தேவயானி – தீபா வெங்கட் இருவரும நெருங்கிய தோழிகளாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: