Advertisment
Presenting Partner
Desktop GIF

அந்த கருத்து என்னுடையது அல்ல... ஆனாலும் மன்னிப்பு கேட்கிறேன் : லால் சலாம் நடிகை வைரல் பதிவு

12 வருடம் முன்பு இது நடந்தபோதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன். அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

author-image
WebDesk
New Update
Dhanya Balakrishnan Laal Salam

நடிகை தன்யா பாலகிருஷ்ணன்

லால் சலாம் படத்தில் நடித்துள்ள நடிகை தன்யா பாலகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் குறித்து வெளியிட்டிருந்த சர்ச்சை பதிவு பெரும் பரபரப்பபை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தனது பதிவுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

Advertisment

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஆகியோர் நடித்துள்ள நிலையில், மோயின்தீன் பாய் என்ற முக்கிய கேரக்டில நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தில் ஏ.ஆர். இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 9-ந் தேதி லால் சலாம் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணன், சில ஆண்டுகளுக்கு பிறகு காவிரி பிரச்சனை தொடர்பான தமிழர்கள் குறித்து அவதூறூக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு அப்போதே டெலிட் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த நெட்டிசன்கள் தற்போது அவருக்கு எதிராக இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

இதன் காரணமாக லால் சலாம் படத்திற்கு சிக்கல் எழுந்த நிலையில், தற்போது நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தனது பதிவுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,

நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்.. "கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்தபோதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன். அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த பதிவை நான் பதிவிடயே இல்லை. அந்த ஸ்கிரின் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான் அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.

நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன் அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பரகளில் பலரும் தமிழர்களே. அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என கனவிலும் நினைக்க மாட்டேன் என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எநத வித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜ ராணி நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேர்வில்லை சர்ச்சைக்குரிய இந்த கருந்து என்னுடையது இல்லை என்றாலும் துரஷ்டவசமாக என பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் திரு ரஜினிகாந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனஉளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நான் இதை செய்யயில்லை என்பரை நிரூபிக்க போறிய ஆதாரங்கள் இல்லாமல்

தவித்துக்கொண்டு உங்கள் மன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.. என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment