Advertisment

நேர்மை முக்கியம்... ஹேப்பி வீக் எண்ட் : கேரளா ஸ்டைலில் தர்ஷா குப்தா ரீசன்ட் க்ளிக்ஸ்

விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் அறிமுகமான தர்ஷா குப்தா மோகன் ஜி இயக்கத்தில் வெளியாள ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
Darsha Gupta Kerala

நடிகை தர்ஷா குப்தா

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா கேரளா ஸ்டைலில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

2017-ம் ஆண் முதல் ஒளிபரப்பான விஜய் டிவியின் முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலில் விஜி என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. தொடர்ந்து, மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கு மேலும் பிரபலமானார்.

Darsha Gupta Kerala

அதன் பிறகு விஜய் டிவியின், சிங்கிள் பொண்ணுங்க, சூப்பர் சிங்கர், கே.பி.ஒய் காமெடி திருவிழா, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கெஸ்டாக பங்கேற்றார். விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளாக பங்கேற்று அசத்தினார். அதன்பிறகு மோகன் ஜி இயக்கத்தில் வெளியாள ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தாலும், அதன்பிறகு அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

Darsha Gupta Kerala

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற தர்ஷா குப்தா, ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமான நிலையில், இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான எஃப்ஏபி விருதை வென்றிருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்த நிலையில். அடுத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Darsha Gupta Kerala

தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வரும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரளா ஸ்டைலில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dharsha Gupta Photoshoot
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment