சின்னத்திரையின் முன்னணி தொகுப்பாளியாக இருந்த திவ்யதர்ஷினி தனக்கு சர்சரி தவறாக செய்ததால் தன்னால் 2 நிமிடம் கூட நிற்க முடியாத நிலையில் உள்ளதாக கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளிகளில் ஒருவராக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சினிமா நட்சத்திரங்கள் பலரை பேட்டி எடுத்துள்ள இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜிடி ஹாலிடேஸ் விளம்பரத்தில் நடித்து வரும் திவ்யதர்ஷினி விஜய் டிவி ஷோக்களில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
மேலும் ஜி.டி ஹாலிடேஸ் விளம்பரத்தில் கூட அவர் நின்றபடி எந்த காட்சியிலும் இல்லாமல் அமர்ந்தபடியே தான் நடித்திருப்பார். இதனால் அவரது காலுக்கு என்ன ஆச்சு என்பது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதற்கு திவ்ய தர்ஷினி பதில் அளித்துள்ளார்.
இதில், முன்பு சின்ன கால்வலி முட்டில் பிரச்சனை இருந்தது. அதற்காக சர்ஜரி பண்ணாங்க. ஆனால் அந்த சர்ஜரி தப்பாக போய்விட்டது. அதை சரி செய்வதற்காக இன்னொரு சர்ஜரி செய்தார்கள். அதற்கு அடுத்து 3-வதாக மற்றொரு சர்ஜரி செய்தார்கள். இதெல்லாம் பண்ணி முடிப்பதற்குள் எனக்கு பிரச்சனை அதிகமாகிவிட்டது. எனது மூட்டுகளில் அதிகமான வலி ஏற்பட்டது.
இந்த வலி ஏன் வருகிறது எதனால் வருகிறது என்பது தெரியவே தெரியது. ஆனால் இந்த பிரச்சனை வந்தால் வாழ்நாள் முழுவதும் பிரச்சனைதான். என்னதால் ட்ரீட்மெண்ட் பண்ணாலும் சரியாகவே ஆகாது. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை நம் மனது ஏற்றுக்கொள்ளும். ஆனாலும் இந்த பிரச்சனையை ஏற்றுக்கொள்ளும்போது நம்மை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படிதான் இப்போது என்னால் விஜய் டிவியில் ஷோ பண்ண முடியவில்லை என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“