Advertisment

ஸ்ருதிஹாசனுடன் ரொமானஸ்... நீங்களே இப்படி பண்ணலாமா? லோகேஷ்க்கு செக் வைத்த ரஜினி ரசிகர்கள்

சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்திருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது ஸ்ருதிஹாசனுடன் ‘’இனிமேல்’’ என்ற பாடலில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gayatrie Shankar

காயத்ரி ஷங்கர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஸ்ருதிஹாசன் – லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள இனிமேல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விக்ரம் படத்தில் நடித்த நடிகை காயத்ரி ஷங்கர் லோகேஷ் கனகராஜ்-க்கு கேள்வி கேட்டு வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், 5 படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. குறிப்பாக விகரம், லியோ என அவர் இயக்கிய கடைசி 2 படங்களும் வசூலில் பெரிய சாதனை படைத்த நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த படத்தற்காக திரைக்கதை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனிடையே அவ்வப்போது திரைப்படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது ஸ்ருதிஹாசனுடன் ‘’இனிமேல்’’ என்ற பாடலில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த பாடலின் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பாடலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் லோகேஷ் மற்றும் ஸ்ருதியின் காதல் மற்றும் ரெமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் லோகேஷின் நடிப்பும், ஸ்ருதியுடன் அவரின் ரோமான்சும் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த ஆல்பம் பாடல் மார்ச் 25-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த ப்ரமோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், டீசரை பார்த்த நடிகை காயத்ரி, உங்கள் படத்தின் ரொமான்ஸ் செய்தபோது தலையை வெட்டிவிட்டு இப்போது என்னமா இது லோகேஷ் என்று காமெடியாக பதிவிட்டுள்ளார். காயத்ரி லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் பகத் பாசில் ஜோடியாக நடித்திருந்தார். இவர்களின் ரொமான்ஸ் காட்சி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், விஜய் சேதுபதி காயத்ரியின் தலையை வெட்டிவிடுவது போன்ற காட்சி படத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.  இதுவரை தனது படங்களில், கத்தி, துப்பாக்கியுடன், நடிகைகளை கொலை செய்யும் காட்சிகளாக வைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லோகேஷ் கனகராஜ், தனக்கு ரோமான்ஸூம் வரும் என்று அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில், ‘இனிமேல்’’ பாடல் டீசரில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் காட்சியில் கலக்கியுள்ளார். ஆனால் இந்த டீசரை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் லியோ படத்தை முடித்துவிட்டு தலைவர் 171 படத்தை இயக்குவார் என்று பார்த்தால் இவர் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காரே என்று கூறி வருகின்றனர்.

மேலும், சினிமாவில் இருந்து விஜய் விலகிவிட்டார், சி.எஸ்.கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிவிட்டார், இளையராஜா வாழ்க்கையில் தனுஷ் ஹீரோவாகிவிட்டார் இப்படி பல சர்ப்ரைஸ் வந்துவிட்ட நிலையில், 2024-ம் ஆண்டு மேலும் ஒரு சர்ப்ரைசாக, லோகேஷ் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் ஹீரோவாகிவிட்டார் இன்னும் எத்தனை சர்ப்ரைஸ் வரப்போகுதோ தெரியவில்லை என்று கூறி வருகின்றனர்.

மேலும் என் படத்தில் தான் ஹீரோயின் கூட ரொமான்ஸ் பண்ண கூடாது ஆனால் நான் படததில் ரொமான்ஸ் பண்ணுவேன் என்று லோகேஷ் சொல்வது போல் கலாய்த்து வருகின்றனர். அதேபோல் லியோ படத்திற்கு பிறகு, தலைவர் 171 படத்தை இயக்காமல் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் பண்ணிக்கொண்டிருக்கும் லோகேஷ், தலைவர் 171 படத்தை கோட்டைவிட போகிறார் என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Lokesh Kanagaraj Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment