New Update
/indian-express-tamil/media/media_files/Njd2KuOSUwSpWqNp9ROk.jpg)
நடிகை கவுரி கிஷான்
96 அடியே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை கவுரி கிஷான் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கவுரி கிஷான்
விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுக்களை பெற்றவர் கவுரி கிஷான்.
மார்கம்கலி என்ற மலையாள படத்தில் நடித்திருந்த இவர், அடுது்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தினார்.
மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக கவுரி கிஷான் நடித்திருந்தார். அதன்பிறகு 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்தார்.
கவுரி கிஷான், தனுஷின் கர்ணன் படத்திலும் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தியிருந்த கவுரி கிஷான் அடுத்து புத்தம்புது காலை, பிகினிங், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான அடியே என்ற தமிழ் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்திருந்த கவுரி கிஷான், தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிபடங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், சமூகவலைதளங்களில், ஆக்டீவாக இருக்கும் கவுரி கிஷான் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கவுரி கிஷான் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.