இப்போதும் & எப்போதும்…. திருமண போட்டோ வெளியிட்ட ஹன்சிகா : பிரபலங்கள் வாழ்த்து

கடந்த சில தினங்களுக்கு நடிகை ஹன்சிகா தொழிலதிபருடனான தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இப்போதும் & எப்போதும்…. திருமண போட்டோ வெளியிட்ட ஹன்சிகா : பிரபலங்கள் வாழ்த்து

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையை சேர்ந்த நடிகை ஹன்சிகா, கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மகா திரைப்படம் கலவையாக விமர்சனங்களை பெற்றது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு நடிகை ஹன்சிகா தொழிலதிபருடனான தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த பதிவில், தனது காதலரும் பிஸினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட படங்களைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹன்சிகா, இப்போது&எப்போதும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் டிசம்பர் 4, ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனிடையே திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

அதனைத் தொடர்ந்து தற்போது திருமணம் தொடர்பான புகைப்படங்களை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திருமணப் படங்களில், ஹன்சிகா தனது வழக்கமான சிரிப்புடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் புகைப்படங்களைப் பகிர்ந்த பதிவில் இப்போதும் மற்றும் எப்போதும் 4.12.2022 என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ஹன்சிகாவின் நெருங்கிய நண்பர்களான மந்த்ரா பேடி, ஈஷா குப்தா, ஸ்ரீயா ரெட்டி, சோனல் சவுகான், சுந்தீப் கிஷன் மற்றும் ஆர்த்தி ரவி என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் குட்டி குஷ்பு என்று அழைக்கப்படும் ஹன்சிகாவுக்கு நடிகை குஷ்பு வாழ்த்துக்கள் பொம்மை குழந்தை மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.  

ஹன்சிகா மோத்வானி நடிப்பில், பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, 105, கார்டியன் மற்றும் மை3 உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress hansika khaturiya wedding photos viral

Exit mobile version