New Update
/indian-express-tamil/media/media_files/osF3h4ShyVbdvf1wqeB9.jpg)
ஹன்சிகா மோத்வானி புகைப்படங்கள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகா மோத்வானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹன்சிகா மோத்வானி புகைப்படங்கள்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளவர் ஹன்சிகா மோத்வானி. 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
அரண்மனை படங்களில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஹன்சிகா நடித்துள்ளார்.
கடைசியாக தமிழில் மகா என்ற படத்தில் நடித்த ஹன்சிகா தற்போது, பார்ட்னர், ரவுடி பேபி, காந்தாரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் கடந்த ஆண்டு சோகையில் கதூரியா என்ற பிஸினஸ் பார்னரை திருமணம் செய்துகொண்ட ஹன்சிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
சமூக வலைளதங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.