போலீஸ் கெட்டப்பில் பிரபல நடிகை என்டரி: 60-ம் கல்யாணம் நடக்குமா? 'வள்ளியின் வேலன்' அப்டேட்

ஜீ தமிழின் வல்லியின் வேலன் சீரியலில், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்துள்ள பிரபல நடிகை, சிறப்பு தோற்றத்தில் களமிறங்கியுள்ளார்.

ஜீ தமிழின் வல்லியின் வேலன் சீரியலில், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்துள்ள பிரபல நடிகை, சிறப்பு தோற்றத்தில் களமிறங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Valliyin velam

பார்ட்டி கொண்டாட்டத்தில் சீனு, மாயா.. சிக்க போகும் கார்த்திக்? நடக்கப்போவது என்ன? விறுவிறுப்பும் கலகலப்பும் நிறைந்த சந்தியா ராகம் சண்டே ஸ்பெஷல் எபிசோட்

Advertisment

சந்தியா ராகம் சீரியலின் 2 மணிநேர சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சிறப்பு எபிசோடில், கார்த்திக் தங்கி இருக்கும் ஹோட்டலில் நடக்கும் பங்ஷனில் கலந்து கொள்ள சீனுவிற்கு அழைப்பு வருகிறது. மனைவியுடன் வர வேண்டும் என இன்விடேஷனில் இருக்க மாயா அதை கவனித்து சீனுவுடன் கிளம்பி செல்கிறாள்.

அதே நேரத்தில் இந்த விஷயம் அறிந்த பத்மா, பார்வதி நிகழ்ச்சியில் வைத்து மாயாவை அசிங்கப்படுத்த திட்டம் போட்டு மாறுவேடத்தில் கிளம்பி வருகின்றனர். இதை தடுப்பதற்காக கதிர் மற்றும் தனமும் மாறுவேடத்தில் கிளம்பி வருகின்றனர். இந்த பங்ஷனில் மேடை ஏறிய சீனு ஆங்கிலத்தில் பேச தடுமாற இங்கிலிஷ் காரர் ஒருவர் அவனை அவனமானப்படுத்தி பேச மாயா மேடை ஏறி அவனுக்காக ஆங்கிலத்தில் பேசி அசர வைத்து சீனுவின் கௌரவத்தை காப்பாற்றுகிறாள்.

மாயாவை சிரிக்க வைத்து அவனமானப்படுத்த திட்டம் போட்டு கர்சீப்பில் கெமிக்கலை கலந்து வைக்க கதிர் அதை எடுத்து வர தனம் விஷயம் தெரியாமல் அதை பயன்படுத்தி விட அவள் சிரித்து கொண்டே இருக்க தொடங்குகிறாள். அவளை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் முடியாத கதிர் கிஸ் கொடுத்து ஷாக்காக்கி அவளை இயல்புநிலைக்கு கொண்டு வருகிறான், அடுத்து ஒருவரை ஒருவர் 15 நிமிடம் கண்களை மட்டுமே பார்த்து நிற்க வேண்டும் என்று ஒரு போட்டி நடக்கிறது.

Advertisment
Advertisements

இந்த போட்டியில் சீனு கலந்து கொள்ள மறுக்க மாயா இல்லனா விவாகரத்து பேப்பரை கிழித்து போட்டு விட்டு வீட்டில் விஷயத்தை சொல்லிடுவேன் என்று மிரட்ட கதிர் வேறு வழியின்றி கலந்து கொள்கிறான். பத்மா, பார்வதி மாயா கண்ணில் மிளகாய் தூளை தூவ திட்டம் போடுகின்றனர். கார்த்திக் எதார்ச்சையாக கீழே வர கதிர், தனம், மாயா ஆகியோர் இங்கே இருப்பதை கவனிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நியூ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. ஜானகி கழுத்தில் தாலி கட்டும் ரத்தினவேல் - பரபரப்பான திருப்பங்களை நோக்கி வள்ளியின் வேலன்

வள்ளியின் வேலன் சீரியலில் வள்ளியும் வேலனும் ஒன்று சேர்ந்து ரத்தினவேல் மற்றும் ஜானகியை சேர்த்து வைக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் வரும் நாட்களில், ரத்தினவேல் வீட்டில் சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்க வேதநாயகி ஜானகியை வர சொல்கிறாள். ஜானகி கழுத்தில் தாலி இல்லாமல் இருக்க பூஜைக்கு வந்தவர்கள் அவளை அவமானப்படுத்துகின்றனர். 
இதனால் வள்ளியும் வேலனும் வேதநாயகி கையால் இறங்கிய தாலி அவளது கையாலே ஜானகி கழுத்தில் ஏற வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.

ரத்தினவேலுக்கு 60-வது பிறந்த நாள் வர இதே தினத்தில் 60-ம் கல்யாணத்தை செய்து வைக்க பிளான் போடுகின்றனர். வேதநாயகியிடம் ஒரு கேம் விளையாடி 11 பேருக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் வாங்குகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் நடக்க வேதநாயகிக்கு உண்மை தெரிய வருகிறது. பங்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்த ஜானகியை வேதநாயகி கழுத்தை பிடித்து வெளியே தள்ள ஒரு கை அவளை தாங்கி பிடிக்கிறது. அது முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி பிரபல நடிகை இனியா என தெரிய வருகிறது. சிறப்பு வேடத்தில் சீரியலில் நடிக்க வரும் இனியா ஜானகிக்கும் ரத்தினவேலுக்கும் 60-ம் கல்யாணம் செய்து வைக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: