"கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா" இந்த பாட்டு ஞாபகம் இருக்கா? இந்த நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க!

கலகலப்பு, சாமுராய் ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயா சீல் அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஒரு பெங்காலி படத்தில் நடித்திருந்தார்.

கலகலப்பு, சாமுராய் ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயா சீல் அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஒரு பெங்காலி படத்தில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Kannaukkule

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை முதல் படத்தில் அறிகமாகிவிட்டால், அந்த படத்தின் வெற்றியை பொருத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும். இப்படி பல நடிகைகள் உருவாகி இன்று முன்னணி நடிகைகளாக உயர்ந்திருக்கிறார். அதே சமயம் ஒரு சில நடிகைகள் முதல் படம் பெரிய வெற்றியை பெற்றாலும் அதன்பிறகு வாய்பபு இல்லாமல், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து முடித்துக்கொள்வார்கள்.

Advertisment

அந்த வகையிலான ஒரு நடிகை தான் ஜெயா சீல். இந்தியில் 1999-ம் ஆண்டு வெளியான அம்ரிதா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 2000-ம் ஆண்டு வெளியான பெண்ணின் மனதை தொடடு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். எழில் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரபுதேவா, சரத்குமார், விவேக், தாமு, வையாபுரி, மயில்சாமி, கனல் கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக “கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” என்ற பாடல் இன்றும் காதலர்களின் முக்கிய பாடலாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து, கலகலப்பு, சாமுராய் ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயா சீல் அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஒரு பெங்காலி படத்தில் நடித்திருந்தார்.

தற்போது, ஃபிளவர்ஸ் ஆப் தி மௌன்டைன் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகியுள்ள ஜெயசீல், சமீபத்தில், அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண்ணின் மனதை தொட்டு படம் மற்றும் பிரபுதேவாவுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், படத்தில் வரும் “கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” பாடல் கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த பாடலை எழில் சார் படமாக்கிய விதமும் அழகாக இருந்தது. ரசிகர்கள் மனத்தில் இந்த பாடல் நிலைத்திருக்கிறது.

Advertisment
Advertisements

பிரபுதேவா சார் கூட சண்டைபோடும் மாண்டேஜ் காட்சிகள், மழையில் நனைவது, கோவிலில் வரும் செருப்பு சீன், கோவிலில் அவரிடம் பணம் கொடுப்பது, அவர் வரும்போது நான் ஆச்சரிப்படுவது, இங்கு என்ன பண்ணீங்க என்று கேட்பது என அனைத்துமே நன்றாக இருந்தது. இந்த படத்திற்காக நான் ரிக்ஷா ஆட்டோ ஓட்டினேன். அந்த படத்தின் மெலோடி மற்றும் பாடல்கள் அனைத்தும் சூப்பராக இருந்தது. இந்த பாடலை வைத்தே மக்கள் என்னை அடையாளம் காண்கிறார்கள். இப்போதும் மக்கள் என்னிட்டம் ஆட்டோஃகிராப் வாங்குகிறார்கள்.

கடைசியாக 2022-ம் ஆண்டு சென்னை வந்தேன். அந்த அன்புக்கு நன்றி சொல்கிறேன்., படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி. அந்த பாடல் பற்றி இன்றும் நான் உணர்கிறேன், பாரிஸ், லண்டன், சிங்கப்பூர் என எங்கு சென்றாலும் உணர்கிறேன். அங்கு மக்கள் என்னை பார்த்து நீங்கள் அவங்கதானே என்று கேட்பார்கள். அந்த அன்புக்கு நன்றி சொல்கிறேன். பல இடங்களில் ஆடிஷன் போயிருக்கிறோம். மும்பையில் ஆடிஷன் போகும்போது செலக்ட் ஆனேன். இப்படி நடந்தது உண்மையில் ஆச்சரியம் தான்.

படத்தின் இயக்குனர் எழில் மிகவும் மென்மையானவர். அவர் சொன்ன கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த காலத்து பெண்கள் உடை அணிவது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். இந்த கேரக்டர் எனக்கு கிடைச்சதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: