சமீபத்தில் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது சூர்யா அவரது மனைவி ஜோதிகா இருவரும் கோவில்கள் தரிசனம் செய்து வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா நடிப்பில், 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வெளியான படம் கங்குவா. வரலாற்று பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்த நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார்.
கங்குவா கடும் விமர்சனம்
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இந்த படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படமாக வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 14-ந் தேதி வெளியாக கங்குவா திரைப்படம் கடுமையாக விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு ஆதரவாக திரை பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தாலும், ரசிகர்கள் பலரும் கங்குவா திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை கொடுத்திருந்தனர்.
படத்தின் ரசிகர் ஷோ பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் யூடியூப்பர்கள் படம் குறித்த கேள்விகளை கேட்டு விமர்சனம் செய்ததே கங்குவா படத்தின் இந்த நிலைக்கு காரணம் என்று கூறி தயாரிப்பாளர் சங்கம் தியேடடருக்குள் யூடியூப்பர்களை விட வேண்டாம் என்று தியேட்ர் உரிமையாளர்களுகளுக்கு அறிவுறுத்தியது. மேலும் கங்குவா திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது கருத்தையும் தெரிவித்திருந்தார்.
ஜோதிகாவின் கருத்து
இது குறித்து ஜோதிகா வெளியிட்ட பதிவில், “நிச்சயமாக படத்தில் முதல் அரை மணிநேரம் சரியாக இல்லை, கடும் சத்தமாக இருக்கிறது! பெரும்பாலான இந்திய திரைப்படங்களில் குறைகள் என்பது படத்தின் ஒருபகுதிதான், குறிப்பாக இத்தகைய பரிச்சார்த்த முயற்சியில் எடுக்கப்படும் திரைப்படங்களில் கண்டிப்பாக இருக்கும்” என்று ஜோதிகா கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்தவுடன் ரசிகர்கள் பலரும் ஜோதிகாவையும் ட்ரோல் செய்ய தொடங்கினர்.
கங்குவா திரைப்படம் தனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த சூர்யாவுக்கு படத்தின் நெகடீவ் விமர்சனம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது ஜோதிகா சூர்யா இருவரும் கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில்களில் தரிசனம் செய்து வரும் சூர்யா – ஜோதிகா
கங்குவா படம் வெளியாகி ஒரு வாரம் கடந்து நடிகர் சூர்யா – இயக்குனர் சிறுத்தை சிவா இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள சோளிங்கர் லட்சுமி நரசிம்ம கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சூர்ய – ஜோதிகா இருவரும் சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் தரிசனம் செய்ததோடு மட்டுமல்லாமல், சூர்யா அங்கு சண்டி யாகம் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் நடிகை ஜோதிகா
இந்நிலையில், தற்போது நடிகை ஜோதிகா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணைதயத்தில் வெளியாகியுள்ளது. திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு, ஜோதிகா வெளியில் வரும்போது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது ரசிகர்கள் சிலர், ஜோதிகாவுக்கு திருப்பதி ஏழுமலையான் புகைப்படத்தை பரிசாக வழங்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“