சிம்ரனுக்கு பதில் ஜோதிகா? இது வேலைக்கு ஆகாது; அதிருப்தியில் ரஜினிகாந்த்: சந்திரமுகி படத்தில் நடந்த சம்பவம்!

2005-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்து, ஜோதிகாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்று தந்தது.

2005-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்து, ஜோதிகாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்று தந்தது.

author-image
WebDesk
New Update
Simran Jyothika

தமிழ் சினிமாவில், கமல்ஹாசன் முதல் விதார்த்த வரை பல முன்னணி நடிகர்களுடன் இணநை்து நடித்துள்ள ஜோதிகா, சந்திரமுகி திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த வாலி திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் தான் ஜோதிகா. தொடர்ந்து சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார், விஜயுடன் குஷி, அஜித்துடன் முகவரி, அர்ஜூனுடன் ரிதம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த ஜோதிகா, சூர்யாவுடன், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

சூர்யா – ஜோதிகா இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது இருவரும் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இதனிடையே, 2005-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்து, ஜோதிகாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்று தந்தது.

அதே சமயம் இந்த படத்தில் முதலில், ஜோதிகா நடித்த சந்திரமுகி, கங்கா கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகை சிம்ரன். அவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார். அதன்பிறகு இந்த கேரக்டரில் நடிக்க ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஜோதிகா இந்த கேரக்டரில் நடிப்பது ரஜினிகாந்துக்கே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்த கேரக்டரில் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

இதனிடையே ஜோதிகா நடிப்பில் முதல் காட்சியாக, பிரபு, துணிக்கடைக்கு கூப்பிடும்போது கட்டிலை தூக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை பார்த்த ரஜினிகாந்த், ஓகே இவர் சிறப்பாக நடிப்பார் இந்த படம் பெரிய வெற்றிப்பமாக அமையும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதை ஒரு நேர்காணலில் நடிகை ஜோதிகா கூறியுள்ளார். சந்திரமுகி படத்தில் நயன்தாரா, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தாலும், அதில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஜோதிகாதான்.

படத்தில் ரஜினிகாந்த் மனோத்தத்துவ மருத்துவராக நடித்திருந்தாலும், ஜோதிகா கேரக்டருக்கு ப்ளாஷ்பேக் காட்சிகள், 2-வது பாதியில் அவருக்கான முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் வரும் ஜோதிகா தொடர்பான காட்சிகள் தெலுங்கில் வெளியான சந்திரமுகி படத்தின் ரீமேக்கான நாகவள்ளி மற்றும் சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 ஆகிய படங்களில் பயன்படுத்தபபட்டது குறிப்பிடத்தக்கது. ஜோதிகாக கடைசியாக தமிழல் உடன்பிறப்பே படத்தில் நடித்திருந்தார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: