மம்முட்டி, அஜய் தேவகன் போல், தென்னிந்திய ஹீரோக்கள் இப்படி செய்ய மாட்டாங்க: ஜோதிகா பேச்சுக்கு பிரபல நடிகர் பதிலடி!

நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வந்த ஜோதிகா கடைசியாக தமிழில் உடன்பிறப்பே என்ற படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தார்.

நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வந்த ஜோதிகா கடைசியாக தமிழில் உடன்பிறப்பே என்ற படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Jyothika Nes

தென்னிந்திய சினிமாவில் நடிகர் மம்முட்டியை தவிர மற்ற அனைவருமே கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் படத்தின் போஸ்டரில் நாயகி படத்தை வைக்கமாட்டார்கள் என்று நடிகை ஜோதிகா பேசியுள்ளது தென்னிந்திய சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

Advertisment

இந்தியில் ஒரு படத்தில் நடித்துவிட்டு, வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஜோதிகா, அதன்பிறகு, தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா நடிப்பில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வந்த ர். தற்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்ட அவர், பல ஜோதிகா கடைசியாக தமிழில் உடன்பிறப்பே என்ற படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தாஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஷைத்தான் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் திகோர் படத்தில் நடித்தார்.

Advertisment
Advertisements

தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம். மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஜோதிகா, கடந்த ஆண்டு வெளியான 'ஷைத்தான்' என்ற இந்தித் திரைப்படத்தில், அஜய் தேவ்கன் மற்றும் ஆர்.மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். விகாஸ் பஹல் இயக்கிய இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போவதாக படக்குழுவினர் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அதில் ஜோதிகா பேசிய சில கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஷைத்தான் படத்தின் படப்பிடிப்பின்போது அஜய் தேவ்கனின் அர்ப்பணிப்பைக் கண்டு தான் வியந்துபோனதாக கூறியுள்ள ஜோதிகா, அஜய் தேவ்கன் ஷைத்தான் படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததைப் பார்த்தபோது தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், இதற்கு முன்பு தான் நடித்த தென்னிந்திய கதாநாயகர்கள் யாரும் இப்படி செய்ததில்லை.

சமீபத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த 'காதல் தி கோர்' படத்தின் போஸ்டரை மம்மூட்டி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அஜய் தேவ்கன் மற்றும் மம்மூட்டியைப் போல தென்னிந்தியாவில் உள்ள மற்ற முன்னணி நடிகர்கள் யாரும் தங்கள் படங்களின் போஸ்டர்களை பகிர்ந்து கொள்வதில்லை.  அந்த நடிகர்கள் கதாநாயகிகள் மீது அக்கறை காட்டுவதில்லை, போஸ்டர்களில் கதாநாயகிகள் இடம்பெறுவதை அவர்கள் விரும்புவதில்லை, அவர்களை ஒதுக்கித்தள்ளவே பார்ப்பார்கள்.

அஜய் தேவ்கன் மற்றும் மம்மூட்டி போன்றவர்களே உண்மையான ஸ்டார்கள், சினிமா துறையில் இப்படிப்பட்டவர்கள் இருப்பது மிகவும் சிறப்பான விஷயம். பல வருடங்களாக நான் கவனித்துவந்த ஒரு விஷயத்தைத்தான் இப்போது வெளிப்படுத்தி இருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஜோதிகாவின் இந்த கருத்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது குறித்து பதில் அளித்துள்ள நடிகர் அருண் விஜய் ஹார் ஜோதிகா என்று அவர் முகம் இடம் பெற்றுள்ள போஸ்டரை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்,

Jyothika tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: