Advertisment

ட்ரெண்டுக்கு திரும்பிய காஜல் அகர்வால்... புதிய போட்டோஷூட் வைரல்

கடைசியாக தமிழில் ஹே செனாமிகா என்ற படத்தில் நடித்த காஜல்அகர்வால், கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பரை திருமணம் செய்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
ட்ரெண்டுக்கு திரும்பிய காஜல் அகர்வால்... புதிய போட்டோஷூட் வைரல்

கயூன் ஹோ காயா னா என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தொடர்ந்து லக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான அவர் பரத்துடன் பழனி என்ற படத்தில் நடித்து தமிழிழுக்கு வந்தார்.

Advertisment
publive-image

தொடர்ந்து நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, பாயும் புலி, கவலை வேண்டாம், மெர்சல், விவேகம், கோமாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

publive-image

கடைசியாக தமிழில் ஹே செனாமிகா என்ற படத்தில் நடித்த காஜல்அகர்வால், கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பரை திருமணம் செய்துகொண்டார்.

publive-image

தற்போது ஒரு குழந்தைக்கு தாயான காஜல் அகர்வால் தனது கவனத்தை மீண்டும் நடிப்பின் பக்கம் திருப்பியுள்ளார். அதில் தனது திருமணத்திற்கு முன்பே ஒப்பந்தமாக கமலின் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

publive-image

மேலும் கருங்காப்பியம், கோஷ்டி ஆகிய தமிழ் படங்களிலும், உமா, ஷூட்அவுட் அட் பைகுலி ஆகிய இந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இந்தியன் 2 பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சில வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Kajal Agarwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment