Advertisment

சிவப்பா... கொஞ்சம் எடை போட்டு... வெள்ளைக்கார பொண்ணு மாதிரி மாறிய கனகா: புது போட்டோ வெளியானது எப்படி?

2000-க்கு பிறகு வெளியில் வராத கனகாவை சந்திக்க பலர் முயற்சித்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினி சந்தித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Kanaka Current Photo

90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை கனகாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இந்த புகைப்படம் எப்படி கசிந்தது? கனகா போஸ் கொடுத்தாரா என்பது போன்ற கேள்விகளுடன் நெட்டிசன்கள் இந்த புகைப்படம் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த தேவிகாவின் மகளாக இவர், சினிமாவில் வரவேண்டாம் என்று இருந்தவர் நடிகை தேவிகா. ஆனால் தனது கரகாட்டக்காரன் படத்தின் நாயகிக்காக பல புதுமுக நடிகைகளை பரிசோதித்த கங்கை அமரன் இறுதியாக கனகாவை கேட்டுள்ளார். முதலில் தேவிகா ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் அதன்பிறகு சம்மதம் தெரிவித்துள்ளார்.

முதல் படமே கனகாவுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து, ரஜினிகாந்துடன் அதிசய பிறவி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார். கனகா. தந்தை இல்லாமல் தாய் தேவிகா அரவணைப்பில் வளர்ந்த கனகா. தேவிகாவின் மரணத்திற்கு பின், தனது வீட்டிலேயே முடங்கினார். கடைசியாக தமிழில் 199-ம் ஆண்டு வெளியான விரலுக்கேத்த வீக்கம் என்ற படத்தில் நடித்திருந்த கனகா 2000-ம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்திருந்தார்.

2000-க்கு பிறகு வெளியில் வராத கனகாவை சந்திக்க பலர் முயற்சித்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினி சந்தித்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பேட்டி அளித்த நடிகர் ராமராஜன், நான் டப்பிங் யூனியன் எலக்ஷன் போயிருந்தபோது, ஒருவர் என்னிடம் வந்து கனகா உங்களை கூப்பிடுவதாக சொன்னார். நான் உடனாடியாக கனகா எங்கே என்று அவரிடமே போய் கேட்டேன். அவர் நான் தான் கனகா என்று சொன்னார்.

சிவப்பா, உடல் எடை போட்டு பார்க்க ஒரு மாதிரி இருந்தாங்க.. பாரதிராஜாவின் சொந்தப்படமான மருதானியில் கனகாதான் நடிக்க வேண்டியது. அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அடுத்து கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமானார். அவரது பெயர் கனகமகாலட்சுமி. நான் தான் கங்கை அமரனிடம் சொல்லி கனகா என்று பெயர் மாற்றம் செய்ய சொன்னேன் என்று ராமராஜன் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த பேட்டி வைரலானதை தொடர்ந்து தற்போது ராமராஜன் சொன்னது போலவே ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

Kanaka Current Photo

சமீபத்தில், ஒரு ஷாப்பிங் மாலில் கனகாவை பார்த்த ஒரு ரசிகர் அவரிடம் கேட்டுக்கொண்டு இந்த புகைப்படத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்சன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல், கனகா மீண்டும் சினிமாவில் நடிக்க கவனம் செலுத்த வேண்டும். ஒதுங்கி இருக்க கூடாது என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment