நேரடியாக தமிழில் தனது 3-வது படமாக சந்திரமுகி படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது பகுதியை முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சந்திரமுகி. ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வினித், வடிவேலு நாசர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். ஹரார் காமெடி படமாக வந்த சந்திரமுகி பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலில் புதிய சாதனை படைத்தது,
தற்போது 18 வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ஏற்கனவெ தமிழில் ஜெயம்ரவியுடன் தாம்தூம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக தலைவி ஆகிய 2 தமிழ் படங்களில் நடித்துள்ள கங்கனா தற்போது தனது 3-வது தமிழ் படமாக சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், லாரன்சுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், அவரை சூப்பர் ஸ்டார் என்றும் எல்லாவற்றையும் விட அவர் நம்பமுடியாத கருணை கொண்ட அற்புதமான மனிதர் என்று பாராட்டியுள்ளார். மேலும் சந்திரமுகியில் நான் இன்று எனது கேரக்டரை முடிக்க இருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் விடைபெறுவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது,
அத்தகைய அழகான குழுவினர், ராகவா லாரன்ஸுடன் என்னிடம் படங்கள் எதுவும் இல்லை. சார் நாங்கள் எப்பொழுதும் திரைப்பட உடையில் தான் இருப்போம், எனவே இன்று காலை படப்பிடிப்பு தொடங்கும் முன் நான் ஒன்றைக் கேட்டேன், லாரன்ஸ் மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்படும் அவர்களால் ஈர்க்கப்பட்டேன், ஏனெனில் அவர் நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர்/சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, நம்பமுடியாத உயிரோட்டமான, கனிவான மற்றும் அற்புதமான மனிதராகவும் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் “உங்கள் கருணை, அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் எனது பிறந்தநாளுக்கான அனைத்து முன்கூட்டிய பரிசுகளுக்கும் நன்றி சார்… உங்களுடன் பணிபுரிந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
சந்திரமுகி 2 ரஜினியின் சந்திரமுகியின் தொடர்ச்சியாக இருக்குமா அல்லது முற்றிலும் புதிய கதையைச் சொல்லுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரஜினிகாந்தை அணுகியதாகவும், அவர் தனது பிஸியான ஷெட்யூல் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
பி வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன், வடிவேலு, மஹிமா நம்பியார், ரவி மரியா மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil