New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Kaniha.jpg)
எதிர்நீச்சல் ஈஸ்வரி
காட்ஃபாதரின் வரலாறு – காயத்ரி மற்றும் ஆட்டோகிராப்பில் தேன்மொழி ஆகியவை இவர் நடித்ததில் பிரபலமான கதாபாத்திரங்கள் ஆகும்.
எதிர்நீச்சல் ஈஸ்வரி
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வரும் கனிகா சீரியல்களிலும் நடித்து வருகிறார். கனிகா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கனிகா முதல் படமான ஃபைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். காட்ஃபாதரின் வரலாறு – காயத்ரி மற்றும் ஆட்டோகிராப்பில் தேன்மொழி ஆகியவை இவர் நடித்ததில் பிரபலமான கதாபாத்திரங்கள் ஆகும்.
திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட கனிகா மதுரையில் பிறந்தவர். மதுரையில் பிரபலமான பள்ளியொன்றில் படித்த கனிகா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
பின்னர், இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே நன்றாகப் பாடும் திறன் கொண்ட கனிகா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது. நடிகை கனிகா ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானார்.
தமிழ் திரைப்படங்களைவிட மலையாளத்தில் அதிகம் நடித்துள்ளார். பாக்யதேவத, பழசி ராஜா மற்றும் ஸ்பிரிட் ஆகிய படங்கள் கனிகா நடித்து பெரிய ஹிட் படங்கள் ஆகும்.
நடிகை கனிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 946k ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக், கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.