Advertisment
Presenting Partner
Desktop GIF

முகம் முழுவதும் தீக்காயம்: கனிகாவுக்கு என்னதான் ஆச்சு? வைரல் போட்டோஸ்!

நடிகை கனிகா, முகம் முழுவதும் தீக்காயத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Kanikha Accident

எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை கனிகா தற்போது எதிர்நீச்சல் சீரியல் முடிந்துவிட்ட நிலையில், முகம் முழுவதும் தீக்காயம் இருப்பது போல் வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

மதுரையில் பிறந்த கனிகா திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்டவர். மதுரையில் பிரபலமான பள்ளியொன்றில் படித்த கனிகா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார். ராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் படித்த கனிகா பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது. தமிழ் திரைப்படங்களை விட மலையாளத்தில் அதிகம் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வரும் கனிகா சீரியல்களிலும் நடித்து வருகிறார். சசி கணேசன் இயக்கத்தில் வெளியான ஃபைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து அஜித்தின் வரலாறு படத்தில் காயத்ரி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சேரனின் ஆட்டோகிராப் படத்தில் தேன்மொழி என்ற கேரக்டரில் படத்தின் இறுதிக்கட்சியில் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்திருந்தார். எதிர்நீச்சல் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கனிகா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர், முகம் முழுவதும், தீக்காயங்களுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரின் கேள்விகளை எழுப்பியுள்ளது. கனிகாவுக்கு என்ன ஆச்சு என்று கெள்விகள் எழுந்து வரும் நிலையில், அதற்கு அவரே விளக்கமும் அளித்துள்ளார். சமீபத்தில் வெளியான விஜயின் கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பலர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள நிலையில், நடிகை கனிகாவும் நடித்துள்ளார்.

படத்தில் சில நிமிடங்களே வந்தாலும், கதையில் இவர்தான் முக்கிய திருப்பமாக இருக்கிறார். வில்லன் மோகனின் மனைவியாக வரும் இவர், இறந்ததனால் தான் மோகன் விஜயயை பழிவாங்க வருவார். இதன் மூலம் படத்தின் திருப்புமுனை கேரக்டராக இருக்கும் கனிகா இந்த வாய்ப்பை தனக்கு வழங்கிய இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவில், பெரிய அல்லது சிறிய கேரக்டராக இருந்தாலும் அதற்கு உயிர் கொடுக்க வேண்டும். ஒரு கலைஞனாக இருப்பது நான் ரசிக்கிறேன், மாற்றுவது, கேரக்டருக்குள் நுழைவது அவசியம். கேமியோ ரோலில் தோன்றுகிறேன்.. ஆனால் அந்த ஒரு காட்சிக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை பலர் பலர் அறிந்திருக்க மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

kanika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment