ஒரு போட்டோவில் கூட கணவர் இல்லையே! ராதா மகள் கார்த்திகா நாயர் ஹனிமூன் க்ளிக்ஸ்

கார்த்திகா நாயர் சமீபத்தில் ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் மலையாள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

கார்த்திகா நாயர் சமீபத்தில் ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் மலையாள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

author-image
WebDesk
New Update
Karthika Nair 19

கணவருடன் கார்த்திகா நாயர்

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் வெளியிட்டுள்ள ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரு போட்டோவில் கூட கணவர் இல்லையே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், 2009 ஆம் ஆண்டு நாக சைதன்யாவுடன் இணைந்து ஜோஷ் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ஜீவா நடித்த கோ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கார்ததிகாவுக்கு முதல் படமே பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளத்தில் மகரமஞ்சு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

தொடர்ந்து தெலுங்கில் தம்மு மலையாளத்தில் கம்மத் கம்மத், மற்றும் கன்னடத்தில் பிருந்தாவனம் போன்ற படங்களில் நடித்த கார்த்திகா கடைசியாக தமிழ் சினிமாவில் 2015-ல் வெளிவந்த புறம்போக்கு என்கிற பொதுவுடமைபடத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார். கார்த்திகா நாயர் சமீபத்தில் ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் மலையாள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

தென்னிந்திய திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நட்சத்திர விழா தொடர்பான புகைப்படங்களை, கார்த்திகா நாயர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது நடிகை கார்த்திகா நாயர் தனது கணவர் ரோஹித் மேனனுடன் ஹனிமூன் சென்றுள்ளார். இந்த புகைப்படங்களை கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ஒரு புகைப்படத்தில் கூட உங்கள் கணவர் இல்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த புகைப்படங்களை எடுத்ததே கணவர் தான் என்று கார்த்திகா நாயர் பதில் அளித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்களிடம் இருந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: