கஸ்டடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
மும்பையை சேர்ந்த கீர்த்தி ஷெட்டி, 2019-ம் ஆண்டு இந்தியில் வெளியான சூப்பர் 30 என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான உபேன்னா படத்தில் நாகியாக நடித்திருந்தார்.
புச்சிபாபு சனா என்பவர் இயக்கிய உபேன்னா படத்தில் பஞ்ச வைஷ்ணவதேஜா நாயகனாக நடித்த நிலையில், கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
அடுத்து ஷாம் சிங்க ராய், பங்கார்ராஜூ உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான தி வாரியர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பிறகு ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்திருந்த கீர்த்தி ஷெட்டி, சமீபத்தில் வெளியான வெங்கட் பிரபுவின் கஷ்டடி படத்தில் நடித்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது அகயின்டே ரெண்டாம் மோஷனம் என்ற மலையாள படத்திலும், ஜெயின் என்ற தமிழ் படத்திலும் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இதில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் கீர்த்தி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“