தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது குழந்தை பருவத்தில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது என்ன மாயம் என்ற படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ், அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தெலுங்கில் வெளியான தசரா படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையெ நேற்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது தந்தை குறித்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதில் காஜல் அகர்வால் மற்றும் நிஷா அகர்வால் இருவரும் தங்களது தந்தையுடன் இருக்கும் புகைப்படமும், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இரு குழந்தைகளடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது.
அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது தந்தையின் மடியில் குழந்தையாக இருப்பது முதல் குமரியாக இருப்பது வரை உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளா. இதில் கீர்த்தி சுரேஷின் குழந்தை பருவ புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழில் மாமன்னன் மட்டுமல்லாமல் ‘சைரன்’, ’ரகு தாத்தா’ ’ரிவால்வர் ரீட்டா’ மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ’போலோ சங்கர்’, ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“