New Update
/
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சேலையில் வித்தியாசமாக வெளியிட்டுள்ள சில போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அடுத்து அவருடன் இணைந்து ரெமோ, உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக மகாநடி என்ற படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்த கீர்த்தி சுரேஷ், இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருந்தார். இதனையடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த கீர்த்தி சுரேஷ், ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்தே படத்திலும், மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
மாமன்னன் படத்தில் புரட்சிப்பெண்ணாக இவர் நடித்திருந்தது பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது. தற்போது அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இந்த படத்திற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். மேலும் இவர் நடித்த ரகுதாத்தா படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் லோநெக் ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என்ன மேடம் மார்க்கெட் இல்லை என்பதால் கவர்ச்சிக்கு இறங்கிவிட்டீர்களா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷா இவர் இப்படி கிளாமர் காட்டுகிறாரே என்றும் கூறி வருகின்றனர். மற்றும் சிலர் இவரது அழகை வர்ணித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இணையத்தில் இந்த புகைப்படங்கள், விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.