கண்ணுல தெறிக்கும் கோபம்... குஷ்புவை அறைஞ்சது யார்?

Tamil CInema Update : கோபத்துடன் முறைத்து பார்க்கும் குஷ்பு தனது பார்வையால் யாரையோ கண்டிப்பது போன்று உள்ளது. குஷ்புவை இந்த அளவுக்கு மோசமாக அறைந்தது யார்,

Tamil CInema Update : கோபத்துடன் முறைத்து பார்க்கும் குஷ்பு தனது பார்வையால் யாரையோ கண்டிப்பது போன்று உள்ளது. குஷ்புவை இந்த அளவுக்கு மோசமாக அறைந்தது யார்,

author-image
WebDesk
New Update
கண்ணுல தெறிக்கும் கோபம்... குஷ்புவை அறைஞ்சது யார்?

Actress Kushboo Viral Photo On Instagram : நடிப்பு அரசியல் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகை குஷ்பு யாரோ கன்னத்தில் அறைந்த காயங்களுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது ஒரிஜினலா அல்லது நடிப்பிற்காக செய்ததா என்று கேட்டு வருகின்றனர்.

Advertisment

80-90ளில் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. ரஜினியின் தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சின்னத்திரையில் கால்பதித்த அவர், சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். தற்போது நடிப்பு மற்றும் அரசியல் என இரு பாதைகளில் பயணித்து வரும் குஷ்பு கடைசியாக ரஜினியின அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். மேலும் சின்னத்திரை சீரியல் மற்றுமு் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு சமீபத்தில் தனது உடல் எடை குறைத்து இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது கன்னத்தில் யாரே அறைந்த காயத்துடன் குஷ்பு வெளியிட்டுள்ளள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு அதில், #SayNoToViolence #StandWithMe #SpeakUpNow nu ஹேஷ்டேக் செய்துள்ளார். மேலும் கோபத்துடன் முறைத்து பார்க்கும் குஷ்பு தனது பார்வையால் யாரையோ கண்டிப்பது போன்று உள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் குஷ்புவை இந்த அளவுக்கு மோசமாக அறைந்தது யார், என்றும், ஒரு வேலை இது புதிதாக அவர் நடிக்கும் படத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது சீரியலுக்காகவா, இல்லை பெண்களுக்கு நடக்கும் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  

மேலும் இந்த பதிவில் கம்மிங் சூன் என்று கூறியுள்ளார். இதனால் இந்த புகைப்படத்திற்கான காணத்தை அவர் அடுத்த பதிவில் தெரிவிக்க வாய்ப்புள்ளது. வரும் 8-ந் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த தினத்திற்காக ஸ்பெஷல் நிகழ்சிக்காக குஷ்பு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Khushbu Sundar Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: