எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் பயிற்சி பெற்றாதாலே என்னவோ எம்.ஜி.ஆரை பார்த்து எனக்கு எந்த பிரமிப்பும் வந்ததில்லை என்று பிரபல வில்லன் நடிகரின் மனைவியும் நடிகையுமான கௌசல்யா செந்தாமரை கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான வில்லத்தனத்தின் மூலம் புகழ்ப பெற்றவர் செந்தாமரை. தூரல் நின்னு போச்சு, ரஜினிகாந்தின் மூன்றுமுகம், தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ள செந்தாமரை, பிரபல டான்சரும், திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த நடிகை கௌசல்யாவை திருமணம் செய்துகொண்டார்.
சிறுவயதிலேயே எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த இவர், பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் நாடக மன்றம் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்த கௌசல்யா தனக்கு வேலை இல்லை என்று எம்.ஜி.ஆர்ரிடம் கூட அவர் தான் நடிக்கும் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் இருந்ததாலே என்னவோ எதுவுமே எனக்கு பிரமிப்பாக தெரியவில்லை. நம்ம வேலையை நாம் செய்கிறோம் என்ற நினைப்புதான் வந்தது. அதேபோல் எம்.ஜி.ஆரை பார்த்தும் எனக்கு வியப்பு வந்ததில்லை. நான் அவருடனும் அவரது அண்ணன் பசங்களுடனும் விளையாடி இருக்கிறேன்.
சிறு வயது முதல் ஒன்றாக இருந்ததாலே என்னவோ அவலரை பார்த்து எனக்கு வியப்பு வந்தத்தில்லை என்று நடிகை கௌசல்யா கூறியுள்ளார். இந்த வீடியோ டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”