Advertisment

நீங்க தான் நடிக்கணும்; நான் வெயிட் பண்றேன்: காமெடி நடிகைக்காக காத்திருந்த கமல்ஹாசன்

வைதேசி காத்திருந்தால், தம்பிக்கு எந்த ஊரு சின்ன வீடு, காதல் பரிசு உள்ளிட்ட பல படங்களில் தனது காமெடி மூலம் தனி முத்திரை பதித்தவர் கோவை சரளா

author-image
WebDesk
New Update
Kamal Haasan

கமல்ஹாசன் கோவை சரளா

தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் என பல கேரக்டரில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 1979-ம் ஆண்டு வெளியான வெள்ளிரதம் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமான இவர், பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

Advertisment

அதன்பிறகு வைதேசி காத்திருந்தால், தம்பிக்கு எந்த ஊரு சின்ன வீடு, காதல் பரிசு உள்ளிட்ட பல படங்களில் தனது காமெடி மூலம் தனி முத்திரை பதித்த கோவை சரளா, சதிலீலாவதி படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் கமல் – கோவை சரளா இடையேயான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

அதேபோல் தனது இளம் வயதிலேயே சின்ன வீடு படத்தில் நடிகர் பாக்யராஜூவின் அம்மாவாக நடித்திருப்பார். அதேபோல் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சூரி உள்ளிட்ட காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து அசத்திய கோவை சரளா, கரகாட்டகாரன் படத்தில் நடித்தது இன்றளவும் கோவை சரளாவின் நடிப்பை ரசிக்கும் படங்களில் ஒன்றாக உள்ளது

இந்நிலையில், சதீலீலாவதி படத்தில் நான் நடிப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் 4 மாதங்கள் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். பாலுமகேந்திரா இயக்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் சதிலீலாவதி. கமல்ஹாசன் ஜோடியாக கோவை சரளா நடித்திருந்த இந்த படத்தில் ரமேஷ் அரவிந்த், ராஜா, ஹீரா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

காமெடி படமாக வெளியான சதிலீாவதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் கோவை சரளா நடிப்பதற்காக கமல்ஹாசன் 4 மாதங்கள் காத்திருந்தாக கோவை சரளா கூறியுள்ளார். முதலில் இந்த படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் கமல்ஹாசன் ஜோடி என்றதும் எனக்கு நம்பிக்கை இல்லை. யாரோ விளையாடுகிறார்கள் என்று நான் பிஸினு சொல்லிட்டு வச்சிட்டேன்.

ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் அதேபோல் கால் வந்தது. அப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு கட்டத்தில் கமல்ஹாசனே எனக்கு போன் செய்து படம் பற்றி கூறினார். அப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லாமல் அவரிடம் கேட்டேன். இது உண்மைதான் என்று கூறினார். ஆனாலும் நான் அப்போது பிஸியாக இருந்ததால் அவரிடம் நடிக்க முடியாது என்று சொன்னேன்.

ஆனாலும் கமல்ஹாசன் நீங்கள் நடித்தால் தான் சரியாக இருக்கும் நீங்க எப்பொ ஃப்ரீ என்று கேட்டார். 4 மாதங்கள் ஆகும் என்று சொன்னேன். அதன்பிறகு 4 நாட்கள் கமல்ஹாசன் எனக்காக காத்திருந்து படப்பிடிப்பை தொடங்கினார். அந்த படத்தில் கமல்ஹாசன் கோவை தமிழ் பேசி நடிக்க அவருக்கு நான்தான் பயிற்சி கொடுத்தேன் என்றும் கோவை சரளா தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment