Advertisment

டாட்டூ, ஹேர் கலரிங்... லைக்ஸ் குவிக்கும் அவந்திகா போட்டோஸ்; குஷ்பூ மகிழ்ச்சி

குஷ்புவின் மூத்த மகளாக அவந்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kushboo Daughter

நடிகை குஷ்பு மகள் அவந்திகா

கடந்த சில தினங்களாக நடிகை குஷ்புவின் மகள்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

நடிகையும் பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமாக குஷ்பு கடந்த 2000-ம் ஆண்டு நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி.யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இருவருமே வெளிநாடுகளில் படித்து வரும் நிலையில், ஒரு மகள் தயாரிப்பாளராகவும், ஒரு மகள் நடிகையாகவும் வர உள்ளதாகவும் அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிட்டதாக நடிகை குஷ்பு கூறியிருந்தார்.

இதனிடையே குஷ்புவின் மூத்த மகளாக அவந்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். முன்னதாக குஷ்புவை போல் அவரது மகள்கள் இருவமே குண்டாக இருந்ததால் பெரும் உருவ கேலிகளை சந்தித்து வந்தனர். அதன்பிறகு மூவருமே கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம் ஆக்கி புகைப்படங்களை வெளியிட்டனர்.

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்தபடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவந்திகா டாட்டூ பிரியராம். இதனால் அவர் உடலில் பல இடங்களில் டாட்டூ வரைந்துள்ளார். மார்பகம், தோல்பட்டை, தொடை மட்டுமல்லமல் கைகள் மற்றும் மணிக்கட்டுகளிலும் டாட்டூக்களை வரைந்துள்ள அவந்திகா, தனது தலைமுடியையும் வித்தியாசமாக பச்சை கலரில் கலரிங் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவர் தான் மிகவும் கியூட்டாக உணர்வதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு மை கியூட்டி என்று பதிவிட்டுள்ளார். தற்போது வெளிநாட்டில் படிப்பை தொடர்ந்து வரும் குஷ்பு மகள் அவந்திகா படிப்பை முடித்து நடிகையாக தமிழ் சினிமாவில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kushboo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment