கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை குஷ்பு அணிந்திருந்த பாரம்பரிய பட்டுப்புடவை இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா உலகளவில் பெரும் பிரபலம். உலகில் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும் இந்த விழாவில், அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி, ராகுல்ராய் நடித்த ஆக்ரா, மணிப்பூரில் 1990-ல் வெளியான இஷானோ ஆகிய இந்திய படங்கள் திரையிடப்படுகின்றன.
திரைத்துறையில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்கும் இந்த விழாவில், இந்திய நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றுள்ள நிலையில், தொடர்ந்து 20-வது ஆண்டாக பங்கேற்றுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த ஆண்டு தனது மகளுடன் பங்கேற்றுள்ளார். மேலும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். ‘
She wears her simplicity like a crown, for it is the most precious adornment a women can possess……..❤️@khushsundar #KhushbuSundar pic.twitter.com/fJlXBI1GEn
— Tanisha 🔥 (@tannu187) May 19, 2023
அதேபோல் நடிகையும் தேசிய மகளிர் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். மேலும் நடிகை குஷ்பு கையால் நெய்யப்பட்ட காஞ்சீவரம் புடவையை உடுத்தி சென்றது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், குஷ்புவின் புடவை தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“