/tamil-ie/media/media_files/uploads/2023/08/Kushboo.jpg)
நடிகை குஷ்பு
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு தற்போது தான் சமூகவலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
80-90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த குஷ்பு, தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதேபோல் அரசியல் பணிகளை தொடர்ந்து வரும் இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து சினிமா மற்றும் அரசியல் பணிகள் என பிஸியாக இருந்து வரும் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளையும், தன்னை பற்றி வரும் கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையிலான பதிவுகளையும் வெளியிட்டு வந்தார். சமூக வலைதளங்களில் சினிமா மற்றும் அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து வந்த குஷ்பு, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், சிறிது காலம் சமூக வலைதளத்தில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் உடல்நல பிரச்சினை காரணமாகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குஷ்பு, ‘நண்பர்களுக்கு வணக்கம். எனக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதால் ட்விட்டரில் இருந்து விலகுகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் பார்க்கிறேன். அதுவரை கவனமாக, பாசிட்டிவாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Hi friends.. I need some detoxification. Going off the radar. Will connect soon. Till then, take care, be good, stay positive. Love you all. ❤️
— KhushbuSundar (@khushsundar) July 30, 2023
குஷ்புவின் இந்த அறிவிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.