தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு, பா.ஜ.க. கட்சியில் இணைந்து தீவிர அரசியல் பணி மேற்கொண்டு வரும் நிலையில், அவர் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
1988-ம் ஆண்டு ரஜினிகாந்த் – பிரபு நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் குஷ்பு. தொடர்ந்து வருஷம் 16, வெற்றி விழா, சின்னத்தம்பி, நாட்டாமை, அண்ணாமலை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 90-களில் தொடத்தில் இருந்து 2000-ம் ஆண்டு தொடக்கம் வரை ரஜினி, விஜயகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாதமல் இந்தி, தெலுங்கு கன்னடம் மலையாளம் என இந்தியாவின் பல மொழிகளில் நடித்துள்ள குஷ்பு, தி பிரிங் ட்ரெய்ன் என்ற பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு முதல் அரசியல் பணிகளை மேற்கொண்டு வரும் குஷ்பு, திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் வலம் வருகிறார். மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள குஷ்பு தொடர்ந்து அசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
சினிமா மட்டுமல்லாமல், சின்னதிரையிலும் கால் பதித்துள்ள குஷ்பு, 1995-ம் ஆண்டு சின்ன சின்ன ஆசை உறவு என்ற சீரியலை இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து, மருமகள், கல்கி, லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள குஷ்பு, கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு மீரா என்ற சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலுக்கான கதைளையும் எழுதியிருந்த குஷ்பு, தனது அவ்னி டெலிமீடியா நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.
இந்த சீரியலுக்கு பிறகு சின்னத்திரையில் நடிக்காத குஷ்பு தற்போது சின்னத்திரையில் ரீ-என்டரி கொடுத்துள்ளார். முன்னணி செனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கியுள்ள டிடி தமிழில், புதிதாக தொடங்க உள்ள, சரோஜினி என்ற சீரியலில் குஷ்பு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்த சீரியலுக்கான பூஜை போடப்பட்டுள்ள நிலையில், புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“