வாரிசு படத்தில் நடிகை குஷ்பு நடித்த ஒரு கட்சிகள் கூட படத்தில் இல்லை என்றாலும் இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பவம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஜெயசுதா, ஷாம், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், குஷ்பு, எஸ்.ஜே.சூர்ய உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தில்ராஜூ தயாரித்திருந்த இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்த நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூாவ அறிவிப்பை வெளியிட்டது.
இதனிடையே வாரிசு படத்தில் நடித்திருந்தாலும் நடிகை குஷ்பு நடித்த ஒரு காட்சிகள் கூட படத்தில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், படத்தின் நீளம் கருதி குஷ்பு காட்சிகளை நீக்கிவிட்டதாக கூறிய படத்தின் எடிட்டர், டெலிட்டடு சீன் என்ற பெயரில் குஷ்பு நடித்த காட்சிகள் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே வாரிசு படத்தில் குஷ்பு நடித்த காட்சிகள் இடம்பெறவில்லை என்றாலும் இந்த படத்திற்காக அவர் 40 லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் குஷ்பு நடித்த காட்சிகள் 17 நிமிடங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil