Advertisment
Presenting Partner
Desktop GIF

தமிழச்சி, தமன்னா, குஷ்பூ... புதிய நாடாளுமன்றத்தில் கலக்கல் சந்திப்புகள்- போட்டோஸ்

புதிய நாடாளுமன்றத்தில் இன்று பாலிவுட் நடிகைகள் நடிகை கங்கனா ரனாவத், இஷா குப்தா, தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்

author-image
WebDesk
New Update
New Parliament

புதிய நாடாளுமன்றத்தில் பாலிவுட் நடிகைகள்

இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் இன்று பாலிவுட் நடிகைகள் திடீர் விசிட் அடித்த நிலையில், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்தியாவில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ந் தேதி தொடங்கிய நிலையில், வரும் 22-ந் தேதி வரை 5 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் 2-வது நாளான நேற்று, நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மாநில சட்டமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களைவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதா விரைவில் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதனிடையே புதிய நாடாளுமன்றத்தில் இன்று பாலிவுட் நடிகைகள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டது. அதன்படி நடிகை கங்கனா ரனாவத், இஷா குப்தா, தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தந்துள்ள நிலையில், அழைப்பை ஏற்று வருகை தந்த நடிகைகளுக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் இனிப்பு வழங்கி வரவேற்ற நிலையில், வருகை தந்த நடிகைகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து இன்று சிறப்பு அழைப்பாளர்களாக நடிகைகள் தமன்னா, திவ்யா தத்தா உள்ளிட்ட சில நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். புதிய நாடாளுமன்றத்தில் நடிகைகள் விசிட் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகை குஷ்பு, திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அரசியலில் திமுக பாஜக என இரு துருவங்களாக இருந்தாலும், தற்போது குஷ்பு தமிழச்சி தங்கபாண்டியன் இருவரும் ஒன்றாக செல்பி எடுத்துக்கொண்டது ஆரோக்கியமான அரசியலை வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்திற்கு வந்த சிறப்பு அழைப்பாளர் தமன்னா, "மகளிருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சாமானிய மக்களை அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே நாடானுமன்றத்திற்கு பாலிவுட் நடிகைகள் அழைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் முதல் குடிமகள் என்று அழைக்கப்படும் ஜனாதிபதி திரௌபதி முர்மு இதுவரை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்கப்படாததே பெரும் சர்ச்கையாக வெடித்த நிலையில், தற்போது நடிகைகள் பாராளுமன்றத்திற்கு வந்ததை சுடு்டிக்காட்டி திரௌபதி முர்மு வராதது குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kushboo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment