12 வருடங்களாக தனது வீட்டில் வளர்ந்த செல்லபிராணி இறந்தது குறித்து நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள உருக்கமான ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. தற்போது நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலில் தீவிரமாக செயலாற்றி வரும் இவர், சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதேடு மட்டுமல்லாமல் பாஜக நிர்வாகியாக தொடர்ந்து செயலாற்றி வரும் குஷ்பு அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் குஷ்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் காமெடி படத்தை கொடுப்பதில் பெயர் பெற்ற இயக்குனரான சுந்தர்.சி-யை திருமணம் செய்துகொண்ட நடிகை குஷ்புவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது வீட்டில் 2 நாய்களை வளர்த்து வந்துள்ளார். இதில் ஒரு நாள் பெயர் குல்ஃபி சுந்தர் மற்றொன்று ஸ்னூப்பி சுந்தர்.
இதில் சமீபத்தில் ஸ்னூப்பி சுந்தர் உயிரிழந்துவிட்ட நிலையில், இது குறித்து குஷ்பு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 12 ஆண்டுகள் எங்களுள் ஒருவராக இருந்தாய். குட்டியாக வந்து எங்கள் இதயங்களில் இடம்பிடித்தாய். உன் அளவில்லா பாசம், புரிதல், ஸ்மைல் உள்ளிட்ட குணங்கள் எங்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இப்போது உன் இழப்பால் நாங்கள் நொறுங்கிவிட்டோம். நீ சாந்தியடைந்துவிட்டாய் என்று நம்புகிறோம்.
உன்னை போன்று யாரும் இல்லை. உன்னை மிஸ் செய்வோம் ஸ்னூப்பி. லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
முன்னதாக சமீபத்தில் குஷ்பு தனது மாமியாருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக தன்னால் கர்நாடக மாநிலம் பைட்டாராயானபுரா தொகுதியில் மக்களை சந்திக்க முடியாவில்லை. மதியம் 12.45 மணியளவில் தனது மாமியார் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டுவிட்டது. அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் சில பரிசோதனைகள் செய்ய வேண்டி இருந்தது. தற்போது அவருக்கு தையல்போடப்பட்டுள்ளது. உங்களின் பிரார்த்தனையால் அவர் இப்போது நலமுடன் இருக்கிறார்.
89 வயதில் அவர் என்னை சார்ந்து இருக்கிறார். என் கணவர் ஊரில் இல்லாததால் என்னால் அவரை தனியாக விட்டு வர முடியாது நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். மன்னிக்கவும் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் குஷ்புவுக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், குடும்பம்தான் முக்கியம் மாமியாரை கவனித்துக்கொள்ளுங்கள் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil