scorecardresearch

எனது மாமியார் அவரது ஹீரோவுடன்… நடிகை குஷ்பு வைரல் ட்விட்

தோனியே பலமுறை சென்னை தனது 2-வது வீடு என்று கூறியுள்ள நிலையில், இந்தியா முழுவதை காட்டியிலும் தமிழகத்தில் தோனிக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

Actress Kushboo
நடிகை குஷ்பு

ஹீரோக்கள் உருவாக்கப்படுவதில்லை பிறக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு தனது மாமியார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தோனி பிறந்தது ஜார்கண்ட் என்றாலும் அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது.

இதில் தோனியே பலமுறை சென்னை தனது 2-வது வீடு என்று கூறியுள்ள நிலையில், இந்தியா முழுவதை காட்டியிலும் தமிழகத்தில் தோனிக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதன் காரணமாக தோனி திரைத்துறையில் கால்பத்தித்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் தயாரித்து வருகிறார். அதேபோல் திரையுலகை சேர்ந்த பலரும் தோனியின் தீவிர ஃபேனாக உள்ளனர்.

அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி அம்மாவும் தீவிர தோனி ரசிகை. அவர் இன்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை குஷ்பு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில்,

ஹீரோக்கள் உருவாக்கப்படவில்லை, அவர்கள் பிறக்கிறார்கள். அதை தோனி நிரூபித்துள்ளார். எங்கள் சிஎஸ்கே தலைக்காக நான் வார்த்தைகளை கூறுகிறேன். அவரது அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலில் என் மாமியாரை சந்தித்தார்.  88 வயதில், ஹீரோ தோனியை வணங்குகிறார், அவரைத் தாண்டி பார்க்க முடியாது. மஹி, நீங்கள் பல வருடங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அவருடைய வாழ்க்கையில் சேர்த்திருக்கிறீர்கள் இதற்காக உங்களுக்கு என் பிராணன்கள் என் நன்றிகள் இதை சாத்தியப்படுத்தியதற்காக சிஎஸ்கேவுக்கு விசில் போடு என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress kushboo twitter post her mother in law with captain dhoni