தமிழ் சினிமாவில் அவ்வப்போது சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஏ.படம் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாங்காடு மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரித்து இயக்கியுள்ள படம் ஏ.படம். அன்னல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இன்றைய சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை கேஸ்லெஸ் சிவா.கோ என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராம் பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்திராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவள், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ராஜகணபதியின் சிரிப்பே தனித்துவமாக இருக்கிறது. இந்த படத்தின் அம்பேத்கராக நடித்துள்ள ராஜகணபதியின் நடிப்பு வசனம் ஆகியவற்றை பார்த்து திகைத்துவிட்டேன். அர்ப்பணிப்போடு எதை செய்தாலும் அது ஜெயிக்கும். அதேபோல் தான் இந்த படத்தின் இயக்குனர் கேஸ்லெஸ் சிவா.கொ பெரிய வெற்றியை பெறுவார்.
இந்த படத்தை பெயரை பார்த்தவுடனே இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியவில்லை. அதனால் இந்த விழாவுக்கு வரலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அண்ணன் (திருமாவளவன்) வருகிறார் என்று தெரிந்ததால் தைரியமாக இங்கு வந்தேன். இந்த சமூதாயத்தில் நடக்கும் பல விஷயங்களை நாம் மனித உரிமைகள் பார்க்கும் கோணத்தில் தான் பார்க்க வேண்டும்.
நான் ஒரு படம் பண்ணிருக்கேன் ஆர் யூ ஓ கே பேபி. இந்த படத்தின் பிஸினஸ் ஷோ சமீபத்தில் திரையிடப்பட்டது. அப்போது இந்த படத்தை பார்த்த ஒருவர் நீங்கள் கம்யூனிஸ்டா என்று கேட்டார். ஆனால் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. இது குழந்தைகள் தொடர்பான படம். என்று சொன்னேன். ஆனால் நீங்கள் கம்யூனிஸ்ட் போலத்தான் படம் எடுத்துள்ளீர்கள் என்று கூறினார்.
ஆனால் எனக்கு அது தெரியாது. இது இடது பக்க சிந்தனையா அல்லது வளது பக்க சிந்தனையா என்பது எனக்கு தெரியாது. சக மனிதர்கள், மனிதநேயம், மனித உரிமைகள் அதன்ப நாம் நடந்துகொள்வோம். அதன்பிறகு அண்ணாவின் (திருமாவளவன்) அபிமானி ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி. அவர் அண்ணாவின் பேச்சுத்திறன், கொள்கை பற்றி அவ்வளவு பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.
இது மாதிரியான வீடியோக்கள் வரும்போது என்னை சமூக வலைதளங்களில் பலரும் தாக்குவார்கள். இரண்டு பக்கமும் அதை செய்வார்கள். அவருக்கும் எனக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் வித்தியாசமான கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அந்த மாதிரிதான் பல தலைவர்கள் முன்பு இருந்திருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ராஜாஜி – பெரியார் இருவரும் அப்படித்தான் இருந்தார்கள் என பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“