ஒரு வருடத்தில் அடி வாங்கிய வனிதா : களத்தில் இறங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவாளர்கள்

Tamil Cinema Update : பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதாவை லட்சும ராமகிருஷ்ணன் ஆதரவாளர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்

Tamil Cinema Vanitha Vs Lakshmi Ramakrishnan Clash : தமிழ் திரையுலகில் தற்போது வைரல் நாயகியாக உள்ளவர் வனிதா விஜயகுமார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆனால் இந்த திருமணம் நடந்து 3 நாட்களில் வனிதா அவரையும் பிரிந்தார். மேலும் பீட்டர் பால் ஏற்கனவே திருமணமான நிலையில், அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வலைதளவாசிகள் பலரும் வனிதாவை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர். மேலும் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் பீட்டர் பால் மனைவிக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார். ஆனால் இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனை வசைபாடிய வனிதா, பேட்டி ஒன்றில் மரியாதை இல்லாமல் வாடி, போடி என்று திட்டினார். இந்த பேட்டி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா,திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதில் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதல் இவர் நிகழ்ச்சயில் இருந்து வெளியேற காரணம் என்று கூறிய நிலையில், அதன்பிறகு வெளியான ப்ரமோவும் அதனை உறுதிப்படுத்தியது. இதை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவாளர்கள், வனிதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதில் ஒரு ரசிகர் 2020ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை திட்டி அவமானப்படுத்தினார். இப்போ ஓராண்டு கழித்து ஜூலை 21ம் தேதி ரம்யா கிருஷ்ணன் கிட்ட வாங்கிக் கட்டிட்டு வனிதா வெளியே போயிட்டார் என்று சமூக வலைதளவாசி ஒருவர் ட்வீட் செய்தார். அதை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணனோ, இந்த உலகத்திலேயே வனிதாவை போன்று வேறு யாராலும் கேவலமாக பேச முடியாது. இது போன்று நாகரீகமில்லாத, மோசமான ஆளை நான் பார்த்ததே இல்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில், லக்ஷ்மி ராமகிருஷ்ணின் கமெண்ட்டை பார்த்த ஆதரவாளர்கள் வனிதா திட்டி ஓராண்டு ஆனாலும் அதை நீங்கள் இன்னுமா மறக்காமல் வேதனைப்படுகிறீர்கள்?. கவலைப்பட வேண்டாம் லக்ஷ்மிமா. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ள நிலையில்,
வனிதா தொடர்பான ட்வீட்டுகளில் தன்னை டேக் செய்ய வேண்டாம் என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress lakshmi ramakrishnan supporters troll vanitha

Next Story
Tamil Serial Rating : ஒரு பிரிவிற்கு பிறகு வரும் காதல் அழகானது: ரசிகர்களின் பாராட்டு மழையில் பாரதி கண்ணம்மா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com