தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய நாயகி லதா, பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும், நடிகர் ரஜினிகாந்துடன் தொடர்புபடுத்து அவரை பற்றிய கிசு கிசுக்ககள் அதிகம் பரவி வந்தது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து நடிகை லதாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், 3 படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த 3 படங்களுமே பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், இதில் 2 படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை லதா. எம்.ஜி.ஆர் இயக்கிய 2-வது படமான உலகம் சுற்றும் வாலிபன் படம் தான் இவர் திரைத்துறையில் அறிமுகமான முதல் படம். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் பல ஹிட் படங்களில் நடித்திருந்த லதா, அவரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு வெளியானது. எம்.ஜி.ஆர் முதல் ஆனபின் நடிப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து, லதா அடுத்து முன்னணி நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார். இவர்களுடனும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் லதா.
மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருந்தாலும், நடிகர் ரஜினிகாந்த் – லதா பற்றிய கிசு கிசுக்கள் அதிகம் பரவியது. இது குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில், பேசிய நடிகை லதா, ரஜினியை பொறுத்தவரை ரொம்ப நல்லவர். அவர் எனக்கு நல்ல நண்பர். அப்போது தான் அவர் திரைத்துறையில் வளர்ந்து வரும் காலம். ஆனால் நான் பல படங்களில் நடித்திருந்தேன். எம்.ஜி.ஆர் ஹீரோயின் என்று அழைக்கப்பட்டவள்.
ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ஷூட்டிங் கோவை ஆழியார் டேம் பக்கத்தில் நடந்தபோது, மஞ்சுளா விஜயகுமார் என்னுடன் இருந்தார். நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எங்கள் க்ரூப்பில் மாலையில் ரஜினிகாந்த் வந்து இணைந்துகொள்வார். நாங்கள் பேசுவோம் ஸ்னாக்ஸ் சாப்பிடுவோம். கோவிலுக்கு எல்லாம் போய்ட்டு வருவோம். அவ்வளவு தான். மற்றபடி கிசு கிசு வர அளவுக்கு, எதுவும். இல்லை. ஆனால் அந்த காலத்தில் சும்மாவே எதையாவது சொல்லிவிடுவார்கள்.
அதேபோல் ரஜினிகாந்த் என்னையும் இணைந்து நிறைய கதை சொல்வார்கள். அதில் ஒன்று கூட உண்மை இல்லை. ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். இன்றைக்கு வரைக்கும் நான் மதிக்கின்ற நல்ல நடிகரை விட நல்ல மனிதர். இன்றைக்கும் அவர் அடக்கமாக இருப்பதால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். பல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு எம்.ஜி.ஆர் படத்தின் கால்ஷீட் காரணமாக இல்லாமல் போனாலும், இன்றுவரை எம்.ஜி.ஆர் லதா ஜோடி பற்றி பேசுகிறார்கள். அதுவே எனக்கு போதும் என்றும் லதா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“