scorecardresearch

திருமண செயலியால் சிக்கிய நடிகை? தடை செய்யப்பட்ட ஆபாச தளத்தில் சம்பாதிப்பதாக புகார்

நடிகை லூப்னா தன் மீது பெரவள்ளூர், வேலூர், வாணியம்பாடி உள்ளிட்ட காவல்நிலையங்களில் பொய்யான புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Actress Lubna
நடிகைன லூப்னா

திருமண செயலி மூலம் தன்னை ஏமாற்றியதாக அளித்த புகாரை வாபஸ் பெற சொல்லி சிலர் தன்னை மிரட்டுவதாக நடிகை லூப்னா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கேக்கிறான் மேய்க்கிறான் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை லூப்னா அமீர். ஒரு சில வெப் சீரிஸ் களில் நடித்துள்ள இவர் திருமணத்திற்கு வரன் தேடுவதற்காக தனியார் செயலியில் பதிவு செய்துள்ளார். அப்போது சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியும் ஐ.டி.ஊழியருமான மசியுல்லாகான் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நெருங்கி பழகிய நிலையில், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது மசியுல்லாகானுக்கு ஏற்கனவே திருமனமாகி குடும்பத்துடன் வசிப்பது லூப்னாவுக்கு தெரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மசியுல்லாகானைவிட்டு லூப்னா விலகியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத மசியுல்லாகான், தன்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி மிரட்டுவதாக லூப்னா திருவல்லிக்கேணி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்த மசியுல்லாகான், தன்மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு நடிகை லூப்னாவுக்கு தனது மனைவியுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகார் அளித்த நடிகை லூப்னா தன் மீது பெரவள்ளூர், வேலூர், வாணியம்பாடி உள்ளிட்ட காவல்நிலையங்களில் பொய்யான புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மசியுல்லாகான் கடந்த ஏப்ரல் மாதம் பேரவள்ளூர் காவல்நிலையத்தில் தன்மீது அளித்த புகார் குறித்து எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ள லூப்னா, தன்னை பற்றி அவதூறு பரப்பும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் பாணியிலும் பேசியதாக மசியுல்லாகான் மற்றும் அவரது மனைவி இருவர் மீது லூப்னா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே தான் முதல் மனைவியுடன் விவாகரத்து பெற முயற்சித்து வருவதாகவும், 2-வது திருமணத்திற்கு திருமண செயலியில் பதிவு செய்தபோது லூப்னாவுடன் பழக்கம் ஏற்பட்டது என்று கூறியுள்ள மசியுல்லாகான் லூப்னா இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலி மூலம் ஆபாச வீடியோக்கள் பதிவு செய்து சம்பாதிப்பதாக தெரியவந்தது. அதனால் அவரிடம் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தன்னிடம் பழகிய காலத்தில் செலவிற்காக பணம் வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் அவரிடம் இருந்து விலகியவுடன் தான் இருக்கும் ஆபாச படங்களை காட்டி லூப்னா மிரட்டியதாகவும், இது தொடர்பாக அவரின் அடியாட்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மசியுல்லாகான் கூறியுள்ளார். இருவரில் யார் சொல்வது உண்மை என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress lubna complaint against matrimony app person