New Update
/indian-express-tamil/media/media_files/rajinikanth-madhavi.jpg)
கடைசியாக 1990-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் அதிசய பிறவி என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த மாதவி அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.
கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சில வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை மாதவி, தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1979-ம் ஆண்டு தமிழில் வெளியான புதிய தோரணங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாதவி. அதன்பிறகு சிவாஜியுடன் அமரகாவியம், தில்லு முல்லு படத்தில் ரஜினிகாந்த், டிக் டிக் டிக் படத்தில் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து நடித்த மாதவி, தான் நடித்த பெரும்பாலான படங்களில் ரஜினிகாந்த் , கமல்ஹாசனுடன் தான் இணைந்து நடித்திருந்தார்.
கடைசியாக 1990-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் அதிசய பிறவி என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த மாதவி அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகினார். தற்போது 62 வயதாகும் இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 1996-ம் ஆண்டு ரால்ப் சர்மா என்ற அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட மாதவிக்கு, 3 மகள்கள் உள்ளனர். இவரின் நிஜ பெயர் கனக விஜயலட்சுமி.
இந்நிலையில், தனது 2-வது மகள், டிஃபானி கௌரிகா ஷர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படங்கள் அடங்கிய வீடியோ பதிவு ஒன்றை மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உன்னை என் கைகளில் குழந்தையாக வாங்கிய அந்த நாளை என்றும் மறக்க மாட்டேன். அதற்குள் இப்படி வளர்ந்துவிட்டாயே என் செல்லமே என்று தனது மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மாதவி மகளா இவர்? என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், மாதவியை போல் இவரும் சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.