ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த முத்து திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வேண்டியது நான்தான் என்று நடிகை மதுவந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. மீனா நாயகியாக நடித்த இந்த படத்தில், சரத்பாபு, ராதாரவி, சுபாஸ்ரீ, பொன்னம்பலம், வடிவேலு, செந்தில், ரகுவரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலில் பெரிய வெற்றியை பெற்றது.
கே.எஸ்.ரவிக்குமார் .இயக்கிய இந்த படம் மலையாளத்தில் மொகன்லால், நடிப்பில் வெளியான தென்மாவின் கொம்பேத் என்ற படத்தின் ரீமேக்தான் என்றாலும் கூட ரீமேக் என்று தெரியாத அளவுக்கு படத்தின் திரைக்கதையை தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி எடுக்கப்பட்ட முத்து படம் தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்த இந்த படம் தமிழகம் மட்டுமல்லாது ஜப்பானிலும் வசூல் சாதனை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல், உலகவில் ரஜினி தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்க்க முத்து ஒரு தொடக்கமாக இருந்தது என்று கூறலாம். முத்து ஜப்பானில் வசூல் செய்த அளவு இதுவரை எந்த இந்திய படமும் வசூலிக்கவில்வைல என்ற சாதனை இன்னமும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் மீனா நடித்த ரங்கநாயகி கேரக்டரில் நான் தான் நடித்திருக்க வேண்டும். ரஜினிகாந்த் என்னைத்தான் நாயகியாக தேர்வு செய்தார் என்று நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி கூறியுள்ளார். 2016-ம் ஆண்டு சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தின் மூலம் அறிமுகமானவர் மதுவந்தி.
தொடர்ந்து கடம்பன், சிவலிங்கா தாராளபிரபு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர் கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு வெளியான மாமாகிகி என்ற படத்தில் நடித்திருந்தார். சன்டிவியின் வாணிராணி தொடரில் சந்திரிக்கா என்ற கேரக்டரில் மதுவந்தி நடித்திருந்தார். நடிகர் ஜெமினிகணேசன் சாவித்ரியின் மகளான விஜயசாமுண்டீஷ்வரியின் மகன் அருண் என்பரை மதுவந்தி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி அடிக்கடி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொள்ளும் மதுவந்தி தற்போது முத்து படம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் கல்லூரியில் நான் படிக்கும்போது முத்து படத்தில் நாயகியாக நடிக்க ரஜினிகாந்திடம் இருந்ந்து அழைப்பு வந்தது. அதேபோல் கமல்ஹாசன் கூட நடிப்பதற்கும் அழைப்புகள் வந்தது.
நல்லவேளைடா... pic.twitter.com/AB8X4vhQ1U
— சாணக்கியன்@A.S.A (@thechanakkiyan) December 14, 2022
ஆனால் அந்த சமயத்தில் படிப்பை முடித்துவிட்டுத்தான் எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும் என்று எனது பாட்டி சொல்லிவிட்டார். அதனால் என்னால் நடிக்க முடியாவில்லை என்று கூறியுள்ளார். மதுவந்தி பேசிய இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.