எளிதில் பிரபலமாக கூடிய முக்கிய மீடியாக்களில் சினிமாவுக்கு முதல் இடம் உண்டு என்பது பலரும் அறிந்த ஒன்று. சினிமா உருவாகிய காலக்கட்டத்தில் நடிக்க வேண்டும் என்றால் பணம் கொடுத்து தான் நடிக்க வேண்டிய நிலை இருந்தது. அந்த நிலை மாறி நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் என்று வந்த நிலையில், தற்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில். சமூகவலைதளங்கள் மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
அதே சமயம் இன்றைய காலக்கட்த்தில் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொள்ள வேண்டிய நிலை இருப்பதாக பல நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்-க்கு ஒப்புக்கொள்ளும் நடிகைகள் சினிமாவில் அதிக வாய்ப்பினை பெறுவதாகவும், விருப்பம் இல்லாத நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகிவிடுவதாகவும் தகவல்கள் அவ்வப்போது பல நடிகைகள் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இளம் நடிகைகளை விட அம்மா நடிகைகளுக்குகே டிமான்ட்ஸ் அதிகமாக இருப்பதாக துணை நடிகையாக மாலதி கூறியுள்ளார். தமிழில் ஒரு சில படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள நடிகை மாலதி கன்னடத்தில் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு அதிகமாக அம்மா வேடங்களே கிடைத்து வருகிறது. இதில் நடிக்கும்போதே பலர் என்னை தவறான முறையில் அனுகுகிறார்கள்.
அம்மா கேரக்டரில் நடிக்க சென்றால் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் டார்ச்சர் செய்கிறார்கள். இதனால் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். இளம் நடிகைகளுக்கு கூட இந்த மாதிரி பிரச்சனை அதிகம் இருப்பதில்லை. என்னை மாதிரி, வயதான துணை நடிகைகளை டார்கெட் செய்து சினிமா பிரபலங்கள் துரத்துகிறார்கள். எந்த பிரச்சனையும் செய்யாமல் பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
அட்ஜெஸ்ட்மெண்ட்-க்கு சம்மதிக்கவில்லை எனறால், அவர்கள் கால் மேல் கால் தூக்கிப்போட்டு அமர்ந்தால் கூட குத்தமாக இருக்கும். அதே அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால், கேரவான், மேடம் என்ற மரியாதை, புது துணிகள், பிக்கப், ட்ராப் என அனைத்து வசதிகளும் கிடைக்கும். சினிமாவில் இது போன்ற அசிங்கத்தை எந்த ஒரு முன்னணி நடிகரும் தட்டி கேட்பதில்லை. இதுபோன்ற அட்ஜெஸ்ட்மெண்ட் அரங்கேறுவதற்கு காரணமே அந்த முன்னணி நடிகர்கள் தான். அதனால் தான் அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை.
சினிமாவில் எந்த அளவுக்கும் நெருக்கம் காட்டி நடிக்க நடிகைகள் தயாராக இருக்கிறார்கள். அதையே அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு அவர்களிடம் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள். சினிமா உலகில் இது நிறையவே நடந்துகொண்டு இருக்கிறது என மாலதி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“