Advertisment

சிறு வயதில் நிகழ்ச்சி தொகுப்பாளர்: இப்போ சினிமா நடிகை: இந்த குழந்தை யார் தெரியுமா?

பிரபல நடிகை ஒருவர் சிறுவயதில் ஆங்கராக நடத்திய ஷோ தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manjima Moha1

சிறுவயதில் ஆங்கராக பிரபல நடிகை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

1997-ம் ஆண்டு மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தொடர்ந்து 2001-வரை குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு வடக்கன் செல்ஃபி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது,

Advertisment

அதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன் அடுத்து சத்ரியன், இப்படை வெல்லும உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிதிருந்த மஞ்சிமா மோகன், 2019-ம் ஆண்டு தேவராட்டம் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

முத்தையா இயக்கிய இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும்போது .இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் கௌதம் – மஞ்சிமா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு எஃப்.ஐ.ஆர் என்ற படததில் நடித்திருந்த மஞ்சிமா கடந்த ஆண்டு வெளியான பூ என்ற படத்தில் நடித்திருந்தார்.

Manjima Moha1

மஞ்சிமாவுக்கு பெரிதாக பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில், தற்போது சிறுவயதில் அவர் தொகுப்பாளராக இருந்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சீரியல் நடிகையாக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில். அடுத்த முறை யாராவது உங்களுக்கு பிடித்த ஆங்கர் யார் என்ற கேட்டால் என்ற பதிவிட்டு, சிரிக்கும் எமோஜியை வெளியிட்டுள்ளார்.

வாழ்வின் மிகவும் மாயாஜாலமான தருணம்... கவுதம் - மஞ்சிமா திருமண போட்டோஸ் வைரல்

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், மஞ்சிமா மோகன் சிறுவயதிலேயே இப்படியா என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment