தமிழில் அசுரன், துணிவு ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை மஞ்சுவாரியார் தற்போது பிஎம்டபிள்யூ பைக் வாங்கியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக மஞ்சுவாரியார் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பொங்கல் தினத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில மஞ்சுவாரியாரின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பொதுவாக ஓய்வு நேரங்களில் பைக் ஓட்டும் அஜித், துணிவு படத்தின் படப்பிடிப்பின்போது பைக் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியாரும் பங்கேற்ற நிலையில், கடந்த மாதம் மஞ்சுவாரியார் தனக்கான இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்காக தேர்வில் கலந்துகொண்டார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில், மஞ்சுவாரியார் தற்போது விலை உயர்ந்த பிம்டபிள்யூ பைக்கை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், "தைரியத்தின் ஒரு சிறிய படி எப்போதும் தொடங்குவதற்கு ஒரு நல்ல இடம். நான் ஒரு நல்ல ரைடராக மாறுவதற்கு முன், நான் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்ல வேண்டும், அதனால் நான் சாலையில் தடுமாறுவதை நீங்கள் பார்த்தால், என்னுடன் பொறுமையாக இருங்கள். என்னைப் போன்ற பலருக்கு உத்வேகமாக இருப்பதற்கு நன்றி #AK #AjithKumar Sir," என்று பதிவிட்டுள்ளார்.
மஞ்சுவாரியார் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ (BMW) 1250 GS பைக்கின் ஆரம்ப விலை ரூ.21.50 லட்சம். மஞ்சுவிடம் ஏற்கனவே நான்கு சக்கர வாகன உரிமம் உள்ளது. கடந்த ஆண்டு மின்சார கார் வாங்கினார். தவிர, அவர் ஒரு ரேஞ்ச் ரோவர் மற்றும் மாருதி பலேனோ உள்ளிட்ட வாகனங்களையும் வைத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“