ஒரே ஃபிரேமில் 2 சூப்பர் ஸ்டார்ஸ்; மகிழ்ச்சியின் உச்சத்தில் மஞ்சு வாரியார்; வைரல் போட்டோ!

வேட்டையன் படத்தின் மூலம் ரஜினிகாந்துடன் நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியார் ஒரே படத்தில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்துள்ளார்.

வேட்டையன் படத்தின் மூலம் ரஜினிகாந்துடன் நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியார் ஒரே படத்தில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Manju warrir

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியார் தற்போது ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரஜினிகாந்த் தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறார், கடைசியாக அவர் நடிப்பில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதற்கு முன்பு வெளியான ஜெயிலர் படம் பெரிய வசூல் வேட்டை நடத்தியது. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது.

Manju warrir

இதனிடையே லால் சலாம் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில், அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் மனசிலாயோ பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

Advertisment
Advertisements

Manju warrir

இதனிடையே வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதனிடையே வேட்டையன் படத்தின் மூலம் முதல்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியார் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அசுரன் படத்தின் மூலம் தனுஷ்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக மஞ்சுவாரியார் அடுத்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்திருந்தார்.

Manju warrir

அதனைத் தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தின் மூலம் ஒரே படத்தில் 2 சூப்பர் ஸ்டார் நடிகளுடன் இணைந்து நடித்துள்ளார். மஞ்சு வாரியார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Manju Warrier Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: