scorecardresearch

கிருஷ்ணனாக மாறி ரொமான்ஸ்: மஞ்சு வாரியர் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கிளிக்ஸ்

மஞ்சு வாரியார் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கிருஷ்ணனாக மாறி ரொமான்ஸ்: மஞ்சு வாரியர் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கிளிக்ஸ்

கண்ணனாக மாறி ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை மஞ்சுவாரியாரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழத்தில் பிறந்தாலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்திருப்பவர் மஞ்சு வாரியார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மஞ்சு வாரியார் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

அசுரன் படத்தில் தனது நடிப்பிற்காக பலரின் பாராட்டுக்களை பெற்ற மஞ்சுவாரியார் துணிவு படத்தில் நடிப்புடன் சேர்த்து ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் பிரபலமானார். துணிவு படத்தில் இடம்பெற்ற இவரின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தற்போது மஞ்சு வாரியார் மேலும் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மஞ்சு வாரியார்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார். இவர்களுக்காக அவ்வப்போது வித்தியாசமான போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சுவாரியார் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

பரதநாட்டிய கலைஞரான மஞ்சு வாரியார் தற்போது கண்ணனாக வேடமிட்டு ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது இதனிடையே மலையாளம், அரபு மொழிகளில் தயாராகி வரும் ‘ஆயிஷா’ உள்பட நான்கு படங்களில் மஞ்சுவாரியர் தற்போது தீவிரமாக நடித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress manju warrier new krishnar romance photo shoot