/indian-express-tamil/media/media_files/2025/08/23/manthra-actress1-2025-08-23-09-56-25.jpg)
டான்ஸ் ஆடுவதில், முன்னணியில் இருந்தாலும் நான் ஆடிய டான்ஸ் விஜய்க்கு சரியாக வரவில்லை. எப்படி செய்தீர்கள் என்று என்னிடம் கேட்டு தெரிந்துகொண்டார் என்று நடிகை மந்தரா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், அஜித், விஜய், அர்ஜூன், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் மந்த்ரா. ராசி என்று அழைக்கப்படும் இவர், ராவ் காரி இல்லு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமா இவர், அடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கில் பல சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அர்ஜூன் நடிப்பில் 1988-ம் ஆண்டு வெளியான தாய்மேல் ஆணை திரைப்படத்தில், சரோஜா தேவியின் மகள் கேரக்டரில் நடித்திருந்தார்,
தொடர்ந்து 1996-ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், அடுத்து, விஜயுடன் லவ்டுடே படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கவுரி, தேடினேன் வந்தது, அஜித்தின் ரெட்டை ஜடை வயசு, அர்ஜூனுடன் கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம், குபேரன், சிம்மாசனம உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.
கடைசியாக கவலை வேண்டாம் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த இவர், சமீபத்தில் வெளியான, யுசூர் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே மந்த்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரியம் படத்தில் நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தேன். அந்த பாடலை பார்த்து விஜய் அவரது வீட்டில் அந்த நடனத்தை ஆட முயற்சித்துள்ளார். ஆனால் அவருக்கு சரியாக வரவில்லை. அதன்பிறகு லவ் டுடே படத்தின், பாடல் காட்சி ஷூட்டிங்கின்போது அந்த டான்ஸ் எப்படி பண்ணீங்க என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் ஆடி காட்டினேன்.
அப்போது அவர் எனக்க வரவே இல்லை நானும் பலமுறை முயற்சி செய்தேன் என்ற சொல்லி, என்னை மீண்டம் ஒருமுறை ஆடி காட்ட சொன்னார். அப்போது அவர் மிகப்பெரிய டான்சர் அவர் என்னை புகழ்ந்தது என் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வை கொடுத்தது என்று மந்த்ரா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.